புதுடில்லி: தமிழகத்தில் கடந்த வாரத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
சுகாதார அமைச்சகத்தின் லாவ் அகர்வால் கூறுகையில், இந்தியாவில் 11 மாநிலங்களில் ஒரு லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் 8 மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். 17 மாநிலங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது. மஹாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர் மாநிலங்களில் அதிகளவு பாதிப்பு பதிவானது. தற்போது, அங்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கவலை அளித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசின் கூட்டு முயற்சி பலன் அளித்து வருகிறது. கடந்த வாரம், தொற்று உறுதியானவர்களின் விகிதம் 21.9 சதவீதமாக இருந்தது. தற்போது 19.8 சதவீதமாக குறைந்து உள்ளது. டில்லி, சத்தீஸ்கர், டாமன் டியூ, ஹரியானா, மற்றும் ம.பி., மாநிலங்களில் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
டில்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகள் மூலம், தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. கறுப்பு பூஞ்சை தொற்று மற்றும் பேக்டிரியல் பாதிப்பால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…