உலகிலேயே அதிக பில்லினியர்களை கொண்ட மூன்றாவது நாடு இந்தியா என போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. மொத்தம் இந்தியாவில் 140 பில்லினியர்கள் உள்ளனர். போபர்ஸ் பத்திரிகை நிறுவனம் உலகின் செல்வந்தர்களின் பட்டியலை 35வது ஆண்டாக வெளியிட்டுள்ளது. அதில் ஆசிய அளவில் முதல் செல்வந்தராக முகேஷ் அம்பானி உள்ளார்.
அவரது மொத்த சொத்து மதிப்பு 84.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். கடந்த ஆண்டு ஆசிய அளவில் முதல் செல்வந்தராக இருந்த சீனாவின் ஜாக் மாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்திருந்தார் முகேஷ் அம்பானி. அதுமட்டுமல்லாது உலகின் டாப் 10 பில்லினியர்கள் பட்டியலில் அம்பானி பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி 50.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உலக பில்லினியர்கள் பட்டியலில் 24வது இடத்தில் உள்ளார். ஷிவ் நாடார் 23.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 71வது இடத்திலும், பூனவல்லா குழும தலைவர் சைரஸ் பூனவல்லா 12.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் 179வது இடத்திலும் உள்ளனர்.
அமெரிக்காவில் 724 பில்லினியர்களும், சீனாவில் 698 பில்லினியர்களும், இந்தியாவில் 140 பில்லினியர்களும் உள்ளனர்.
குழந்தை சிகிச்சை பெற வந்த மருத்துவமனையின் தரையில் படுத்த தந்தை உறங்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.அமெரிக்காவில் உள்ள மிசௌரி பார்மிங்க்டோன் நகரை…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த…
லண்டன்: பஞ்சாப் நேசனல் வங்கியில் கடன் பெற்று தப்பிச் சென்ற நிரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது.…
புதுச்சேரி: கொரோனா பரவலின் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு…
ஹொங்ஹொங்கில் 5 வயதே ஆன குழந்தையை அவரின் தந்தையும் இரண்டாம் தாயும் அடித்து உணவு கொடுக்காமல் துன்புறுத்தியதால் குழந்தை மருத்துவமனையில்…
சென்னை: சென்னையில் தினசரி 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.சென்னை காவல் ஆணையர்…