ஒரிசாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு

புவனேஸ்வர்

ஒரிசாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா கட்டுப்படுத்தலை முன்னிட்டு நாடெங்கும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களிலும் பள்ளி இறுதி மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி அளிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிறிது சிறிதாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த வருடம் நடைபெற உள்ள பொதுத் தேர்வுகளுக்காக ஒரிசாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்காகப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியைப் பின்பற்றி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு சுமார் 100 நாட்கள் வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்குள் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் அவசியம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் சானிடைசர் பயன்பாடும் அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வகுப்பில் 20-25 மாணவர்களுக்கு மேல் அனுமதி வழங்கப்படவில்லை. வகுப்புக்கள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களிலும் நடை பெற உள்ளன. பாடத்திட்டத்தில் 30% குறைக்கப்பட்டுள்ளன.

காவிரி பிரச்சினை தீர்க்க யோசனை கூறுகிறது இஸ்ரேல்! மாதவிலக்கின்போது 5 நாட்கள் விடுமுறை! கேரளா திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு பான் கார்டுடன் ஆதார் இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு

மூக்கில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து சோதனைக்கு அனுமதி கோரும் பாரத் பயோடெக் Next வனவிலங்கு வேட்டையாளர்களை எதிர்கொள்ள வன அதிகாரிகளுக்கு ஆயுதம் வழங்கலாம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

1 year ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

1 year ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

1 year ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

1 year ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

1 year ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

1 year ago