Categories: இந்தியா

திருப்பதி பிரம்மோற்சவ விழா நாட்களில் 4 மாட வீதிகளில் தங்கத்தேர், மரத்தேரோட்ட உலா ரத்து

திருப்பதி பிரம்மோற்சவ விழா நாட்களில் தங்கத்தேரோட்டம், மரத்தேரோட்டம் ஆகியவை ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாகக் கோவில் உள்ளே சர்வ பூபால வாகனத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை வைத்து, கோவில் தங்கப் பிரகாரத்தை வலம் வருகின்றனர்.

Related Post

திருமலை :திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 27-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி 15-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 18-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம் ஆகியவை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.
அதேபோல் 24-ந்தேதி தங்கத்தேரோட்டம், 26-ந்தேதி மரத்தேரோட்டம் ஆகியவை ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாகக் கோவில் உள்ளே சர்வ பூபால வாகனத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை வைத்து, கோவில் தங்கப் பிரகாரத்தை வலம் வருகின்றனர். 27-ந்தேதி சக்கர ஸ்நானம் ஸ்ரீவாரி புஷ்கரணியில் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி வாகனச் சேவை, ஸ்நாபன திருமஞ்சனம் ஆகியவை கோவில் உள்ளே கல்யாண மண்டபத்தில் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

1 year ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

1 year ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

1 year ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

1 year ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

1 year ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

1 year ago