Categories: இந்தியா

ஒரே நாளில் மிக அதிக பாதிப்பு.. 161 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் 2323 பேர் பாதிப்பு.. அதிர்ச்சி!

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

தமிழ்கத்தில் இன்றுதான் இதுவரை ஏற்பட்டதிலேயே அதிகமான பாதிப்பு இன்றுதான் ஏற்பட்டுள்ளது. சென்னையிலும் இன்றுதான் இதுவரை ஏற்பட்டதிலேயே அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 138 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மொத்தம் 906 பேருக்கு ஏற்பட்டுள்ளது. அரியலூரில் இன்று ஒருவருக்கு கொரோனா வந்துள்ளது. மொத்தமாக ஏழு பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மதுரை மற்றும் செங்கல்பாட்டில் 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் மொத்தம் 78 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது

மதுரையில் மொத்தம் 84 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா மூன்று பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் மொத்தம் 26 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் மொத்தம் 18 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை, சேலம் , திருவள்ளூர், கடலூரில் தலா ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கடலூரில் மொத்தம் 27 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.ராணிப்பேட்டையில் மொத்தம் 40 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சேலத்தில் மொத்தம் 32 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் மொத்தம் 55 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

Related Post

பெரம்பலூரில் மொத்தம் 2 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 9 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதனால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1035 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 142 குழந்தைகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று கொரோனா காரணமாக யாரும் பலியாகவில்லை.

இன்று மொத்தம் 48 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை 1258 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

source: oneindia.com

Share
Tags: oneindia

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago