Categories: இந்தியா

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு காங்., உதவும்: சோனியா

புதுடில்லி: ”ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கொரோனாவுக்கு எதிரான போரில், மக்களுக்கு காங்கிரஸ் உதவும்; இந்தச் சிக்கலில் இருந்து, நாடு விரைவில் மீண்டு, வெற்றி பெறும்,” என, காங்கிரஸ் தலைவர், சோனியா கூறியுள்ளார். ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, பிரதமர், மோடி, நாட்டு மக்களிடம் உரையாற்றுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், காங்கிரஸ் சார்பில், சோனியா, மக்களிடம் பேசும், ‘வீடியோ’வை வெளியிட்டது. அதில், சோனியா கூறி இருந்ததாவது: கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில், மக்கள் அனைவரும், வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஊரடங்கின் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரின் ஆதரவும் இல்லாமல், கொரோனாவுக்கு எதிரான போரில், நாம் வெல்ல முடியாது. ஊரடங்கு காலத்தில், மக்கள் அமைதியையும், பொறுமையையும் கடைப்பிடித்து, வீட்டுக்குள்ளேயே இருந்ததற்கு, நன்றி தெரிவிக்கிறேன். நாடு, மிகப்பெரிய போரில் ஈடுபட்டிருக்கும் போது, காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டரும், சூழலைப் புரிந்துகொண்டு, ஒவ்வொரு வீரருக்கும் உதவத் தயாராக இருக்க வேண்டும்.மாநில அளவில், மத்திய அளவில், யார் உதவி கேட்டாலும், ஒவ்வொரு காங்கிரஸ் உறுப்பினரும் உதவுவர். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு, ஆதரவாக இருப்பர். இதுபோன்ற அசாதாரண நேரத்தில், கொரோனாவுக்கு எதிரான போரில், காங்கிரஸ், அரசுக்கு ஆதரவாக இருக்கும் என, மக்களிடம் உறுதியளிக்கிறோம். ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், இந்தப் போரில், மக்களுக்கு காங்கிரஸ் உதவும், இந்தச் சிக்கலில் இருந்து, விரைவில் மீள்வோம் என, நம்பிக்கையுடன் கூறுகிறோம்.கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியைக் கையாள்வதில், மக்கள் அளித்து வரும் ஆதரவு, தேசபக்திக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. உங்களின் உதவி, ஆதரவால் தான், இந்தப் போராட்டத்தில், நாடு வெல்ல முடியும். நம்முடைய டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வ நிறுவனங்கள், போலீசார், அரசு ஊழியர்கள் என, அனைவரும் கொரோனாவுக்கு எதிரான போரில், போர் வீரர்களாகச் செயல்படுகின்றனர். இரவு பகலாக உழைக்கின்றனர்.சில இடங்களில், டாக்டர்கள் மோசமாக நடத்தப்படுவதாக அறிந்தேன். இது தவறாகும். நம் கலாசாரம், பாரம்பரியம், இதை அனுமதிக்காது. டாக்டர்களின் சேவைக்கு, நாம் ஆதரவளிக்க வேண்டும். சிலர், ஏழைகளுக்கு உணவு, ரேஷன் பொருட்கள், கிருமி நாசினி போன்றவற்றை வழங்கி உதவுகின்றனர். அவர்களின் பணி போற்றத்தக்கது. இவ்வாறு, சோனியா கூறியுள்ளார்.உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்:கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்களை எடுத்து வருகிறது. ‘நாடு இக்கட்டான சூழ்நிலையை சந்தித்து வரும் போது, காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவரது கட்சியினரும், அரசியல் செய்கின்றனர்’ என, பா.ஜ., கூறியுள்ளது.’பாதிக்கப்பட்ட மக்களுக்கு, காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை. கொரோனாவுக்கு எதிரான போரில், எதிர்மறையாக செயல்பட்டு வருகிறது. ஒத்துழையாமை அணுகுமுறையை பின்பற்றுகிறது. மக்களை திசை திருப்பி வருகிறது. எதிர்க்கட்சிக்கான பணி, கேள்விக்குறியாக உள்ளது. காங்கிரஸ், இந்த கீழ்த்தரமான அரசியலை கைவிட்டு, அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்’ என, பா.ஜ., கூறியுள்ளது.இந்நிலையில், சோனியாவின் வீடியோ பேச்சு பற்றி, பா.ஜ., தலைவர், ஜே.பி.நட்டா கூறுகையில், ”சோனியாவுக்கு எங்கள் நன்றி; அவர் தன் உடல் நிலையை, நன்கு பார்த்துக் கொள்ளட்டும்,” என்றார்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago