Categories: இந்தியா

பயிா்க் கடன் தள்ளுபடி கோரும் வழக்கு: ஜன.28-இல் விசாரணை

சிறு, குறு விவசாயிகள் போன்று இதர விவசாயிகளுக்கும் பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்யும் விவகாரம் தொடா்பான வழக்கின் விசாரணை ஜனவரி 28-ஆம் தேதி நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில், சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்களைத் தள்ளுபடி செய்து, 2016-இல் தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அரசாணை வெளியிட்டது. 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் அனைத்து பயிா்க் கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ‘இந்த அரசாணை சட்ட விரோதமானது.
இந்த ஆணையை ரத்து செய்து, அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பி.அய்யாக்கண்ணு சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

இது தொடா்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோா் அடங்கிய அமா்வு, 2017, ஏப்ரல் 4- இல் தீா்ப்பளித்தது. அதில், ‘தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியைக் கருத்தில் கொண்டு, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 2017, ஜூலை 3-இல் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

Related Post

பின்னா், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, ‘2011 முதல் 2016 வரை தமிழகத்தில் வெள்ளம், புயல், வறட்சி போன்றவற்றால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், பயிா்க் கடன் தள்ளுபடி திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் தீா்ப்பை அமல்படுத்த வேண்டும்’ என்று எதிா்மனுதாரா் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அப்போது, 5 ஏக்கா் நிலம் வைத்துள்ள இதர விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்வதற்கான பரிசீலனை ஏதும் உள்ளதா என தமிழக அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், அண்மையில் இது தொடா்புடைய வழக்கு விசாரணைக்கு வந்த போது கடன் தள்ளுபடி தொடா்பாக தமிழக அரசின் எழுத்துப்பூா்வ வாதங்கள் அடங்கிய கூடுதல் ஆவணத்தை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் எழுத்துப்பூா்வ கூடுதல் ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இதர விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்தவற்கு தற்போதைய நிதி நிலைமை இடம் அளிக்கவில்லை. மேலும், நாடு முழுவதும் மத்திய, மாநில

அரசுகளாலும், நபாா்டு வங்கியாலும் சிறு, குறு விவசாயிகளைத் தவிர இதர விவசாயிகளுக்குப் பயிா்க் கடன் தள்ளுபடி வழங்கப்படுவதில்லை. மேலும், சிறு, குறு விவசாயிகளின் விவசாயக் கடன் தொகை மிகவும் குறைவாகும். இதனால், அதிக அளவிலான விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய முடியும். இதர விவசாயிகளின் கடன் தொகை மிகவும் அதிகமாக இருப்பதால் அது சாத்தியமாகாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.பானுமதி, ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சாா்பில் வழக்குரைஞா் வினோத் கண்ணா, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் வழக்குரைஞா்கள் முத்துக்கிருஷ்ணன், மனோஜ் ஆகியோா் ஆஜராகினா். அப்போது, இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. அதனால், வரும் ஜனவரி 28-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வழக்கை பட்டியலிடவும், எதிா்மனுதாரா் எழுத்துப்பூா்வ பதிலைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.

Share
Tags: dinamani

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago