Categories
இந்தியா

இன்று இந்திய சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவில் உச்சமான 42,000 புள்ளிகளைத் தொட்டது !!

உலகின் பொருளாதார வல்லரசு நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே கடந்த 2 ஆண்டுகளாக வர்த்தகப் போர் நிலவி வந்தது. இதனால் இரு பெரிய நாடுகளின் வர்த்தக போர் உலகளவிலான பொருளாதாரத்திலும் எதிரொலியை ஏற்படுத்தியது. தற்போது அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான முதற்கட்ட ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. அதனால், இன்று இந்தியாவில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் இதுவரை இல்லாத அளவில் 42,000 புள்ளிகளைத் தொட்டது. இருப்பினும் பல இடைவிடாத பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்ததால் நிதி சந்தைகள் எச்சரிக்கையாக இருந்தன. இன்று காலை சென்செக்ஸ் 41,924 புள்ளிகளுடன் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் அதிகபட்சமாக 42,059 புள்ளிகளைத் தொட்டது.
ஆனால் அடுத்த அரை மணி நேரத்துக்குள் சென்செக்ஸ் இறக்கம் காணத் தொடங்கியது. பின் 41,932 என்ற புள்ளிகளில் சென்செக்ஸ் நிறைவடைந்தது.

Leave a Reply