Categories: இந்தியா

கர்நாடகாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற மிகப்பெரும் போராட்டம்!

கர்நாடகா மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 2 லட்சம் பேர் பங்கெடுத்துள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக நூற்றுக்கணக்கானோர் படகில் பயணம் செய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் ஒரு மாதத்தை கடந்தும் போராட்டங்கள் ஓயாமல் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் நடக்கும் இந்த போராட்டங்கள் அனைத்தும் மக்களை தவறான முறையில் வழிநடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது மத்திய அரசு. இந்த வரிசையில் கர்நாடக மாநிலம் மங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளும், சமூக செயற்பாட்டாளர்களுமான ஹர்ஸ் மேந்தர், கண்ணன் கோபிநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இதில், 2,00,000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Post

மங்களூருவில் நடந்த இந்த போராட்டத்திற்கு கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர். இதனால் பெரும்பாலான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனினும், போரட்டம் நடைபெற்ற பகுதிக்கு செல்ல முடிவெடுத்த பலர் படகுகளின் மூலம் நேத்ராவதி ஆற்றில் பயணித்தனர். உலால் பகுதியில் இருந்து போராட்டம் நடந்த அடையாறு ஷா மைதானத்திற்கு நூற்றுக்கணக்கானோர் படகில் சென்றனர். தேசியக்கொடியை ஏந்திப்பிடித்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

மங்களூருவில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க பெரும் எண்ணிக்கையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இறுதியில் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் தேசிய கீதத்தை பாடி போராட்டத்தை நிறைவு செய்தனர்.

Share

Recent Posts

ஜனவரி 24: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.88.29; டீசல் விலை ரூ.81.14

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.29 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.14 என்ற…

1 hour ago

மத்திய பட்ஜெட் 2021-22: அல்வா நிகழ்ச்சியுடன் தொடங்கியது இறுதிகட்ட பணிகள்

மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-க்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் அல்வா நிகழ்ச்சி இன்று மதியம் மத்திய…

1 hour ago

குறைந்தபட்ச ஆதரவு விலை; 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

2021 ஜனவரி 21 வரை 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.2020-21 காரீப் சந்தைக் காலத்தில் குறைந்தபட்ச…

1 hour ago

திறன்மிகு துறைமுகங்களாக மாற்ற தொழில்நுட்பங்கள்: மத்திய அரசு ஆலோசனை

மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் மூன்று நாள் ஆலோசனை கூட்டம் இன்று நிறைவுற்றது. மத்திய துறைமுகம், கப்பல்…

1 hour ago

வாடிக்கையாளருக்கு வங்கி தரும் எச்சரிக்கை!

அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் போன் செய்து உங்களது நம்பருக்கு ஒரு கோடி லக்கி பிரைஸ் விழுந்துள்ளது, உங்களுக்கு ஒரு…

1 hour ago

சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையா.? அப்ப இதை செய்யுங்கள்.. கண்டிப்பா கிடைக்கும்.!!

கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக எல்பிஜி…

1 hour ago