Categories
Featured இந்தியா

நிலவை நெருங்கும் சந்திரயான்-2; நிலவின் சுற்று வட்டப்பாதையில் 4-வது நிலைக்கு முன்னேற்றம்

பெங்களூரு: சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையில் 4-வது நிலைக்கு முன்னேறியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், திட்டமிட்டபடி 22-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 3,485 கிலோ எடையுள்ள அந்த விண்கலத்தில் நிலவில் இறங்கவும் சுற்றி வரவும் ஆய்வு செய்யவும் அதிநவீன கருவிகள் உள்ளன. இதுவரை, பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த அந்த விண்கலம், ஆறு முறை உயர்த்தப்பட்டு, 14ம் தேதி அன்று அதிகாலை, 2.21 மணியளவில், பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் துவங்கியது. இதனை தொடர்ந்து ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம், ஆகஸ்ட் 20ல் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது.
இந்த நிலையில், சந்திராயன் 2 விண்கலம் நிலவின் 3-வது நிலைக்கு முன்னேறியுள்ளது. 4 கட்டம் உள்ள நிலையில், 3வது கட்டத்தை சந்திராயன் 2 வெற்றிகரமாக எட்டியுள்ளது. அடுத்த 11 நாளில் சந்திராயன்-2 நிலவில் தரை இறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. முன்னதாக, நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான்-2 கடந்த 21ம் தேதி நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியது. 2650 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து நிலவின் மேற்பரப்பை சந்திரயான்-2 விண்கலம் புகைப்படம் எடுத்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. இதையடுத்து, 4,375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மற்றொரு புகைப்படத்தை சந்திராயன்-2 அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply