Categories
இந்தியா

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : பிற்பகல் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்

8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பகல் ஒரு மணி நிலவரப்படி மாநிலவாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 8 மாநிலங்களையும் ஒப்பிடுகையில் அதிகபடசமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 52.89% வாக்குகள் பதிவாகின. மேற்கு வங்காளம் மாநிலத்தில் 47.55% வாக்குகளும், மத்தியப்பிரதேசத்தில் 43.89% வாக்குகளும், பஞ்சாப்பில் 36.66% வாக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 36.37% வாக்குகளும், பீகாரில் 36.20% வாக்குகளும், சண்டிகரில் 35.60% வாக்குகளும், இமாச்சலப்பிரதேசத்தில் 34.47% வாக்குகளும் பதிவாகின. ஒட்டுமொத்தமாக மேற்கண்ட 59 தொகுதிகளிலும் ஒரு மணிவரை 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

Leave a Reply