Categories
இந்தியா

Exit Poll Results 2019: எக்ஸிட் போல் முடிவுகள் எங்கு? எப்போது?

மக்களவைத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் லைவ்வாக காணலாம். முன்னணி தொலைக்காட்சிகள் அனைத்தும் இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.

2019-ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. இறுதிகட்ட தேர்தல் வாக்குப் பதிவு இன்று (மே 19) மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது. தேர்தல் முடிவுகளுக்கு முன்னோட்டமாக கருத்துக் கணிப்புகள் மீதும் மக்களுக்கு எதிர்பார்ப்புகள் இருந்தே வருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை, வாக்குப் பதிவுக்கு இரு தினங்களுக்கு முன்பே கருத்துக் கணிப்பு வெளியிட முடியும். அதேபோல வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பான ‘எக்ஸிட் போ’ முடிவுகளை அனைத்துக் கட்ட தேர்தல் வாக்குப் பதிவும் முடிந்த பிறகே வெளியிட இயலும்.

அதன்படி 7 கட்டமாக நடந்த அனைத்துத் தொகுதிகளுக்குமான எக்ஸிட் போல் முடிவுகளை இன்று (மே 19) மாலை 6.30 மணிக்கு மேல் வெளியிட இயலும். எனவே எக்ஸிட் போல் தயார் செய்த தொலைக்காட்சி நிறுவனங்கள், கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் அனைத்தும் இன்று மாலை 6.30 மணி முதல் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட இருக்கிறார்கள்.

எக்ஸிட் போல் முடிவுகளை, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளம் உடனுக்குடன் லைவ்வாக தர இருக்கிறது. மாலை 6 மணி முதல் இது தொடர்பான செய்திகளை காணலாம். முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களும் இது தொடர்பான லைவ் செய்திகளையும் விவாத நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றன.

Leave a Reply