Categories
ஆரோக்கியம்

கருப்புத் தோல் அழகானது; ஆயுர்வேதம் மூலம் ஒளிரச் செய்யுங்கள்!

மனிதகுலத்தின் வரலாற்றில் உள்ள ஒவ்வொரு தலைமுறையும் ஒரு காலகட்டத்தில் சமுதாயத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்திற்கே ஆதரவாக இருந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் அடிமை முறை ஒழிந்து,ம் பெண்ணியம் வளர்ச்சியைக் கண்டது. தொழிலாளர் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான போராட்டம் 20 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது. இப்போது, ​​21 ஆம் நூற்றாண்டில் உங்கள் பாலினம், பாலியல்னிலை, உடல் வகை அல்லது தோலின் நிறம் போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் சமத்துவம் மற்றும் ஏற்புக்கான அழைப்பு மூலம் சமூகம் சரிப்படுத்தப்படுகிறது.

இந்தச் சகாப்தத்தின் ஒவ்வொரு இயக்கமும் முக்கியம் என்றாலும், “கருப்பு அழகானது” என்ற இயக்கம் மற்றவற்றை விட மிக முக்கியமானது, ஏனென்றால் வரலாற்றின் பக்கங்களை இரத்தத்தால் அடையாளமிட்டவர்களை மனிதர்களாக கருதும் அளவுக்கு அவர்கள் “போதிய வெள்ளை” ஆகவில்லை.

“இது தோலின் நிறத்தை விட அழகையே தீர்மானிக்கிறது என்பதே எங்கள் எண்ணம். தோல் நிறமானது பிறப்பு மூலம் வருகிறது, ஆனால் வண்ணமும் அழகும் கவனிப்பாலும் நம்பிக்கையாலும் பெறப்படுகிறது. ஆயுர்வேத வாழ்க்கை முறையானது உடல் மற்றும் உடல் அழகை வளர்த்துக் கொள்ள உதவுகிறது, இது ஒருவருக்கு உயர் சௌகரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறது “என்று இந்துஸ்தான் யூனிலீவர் தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகளின் பிராண்ட் ஆன லீவர் ஆயுஷ் நிறுவனத்திலுள்ள டாக்டர் மகேஷ் டி.எஸ். என்ற ஆயுர்வேத நிபுணர் கூறுகிறார்.

கருப்புத் தோல்: உயிரியல்சார் நன்மை

முழு உலகமும் இப்போது வரை வெள்ளைத் தோலைப் பற்றி அளவுகடந்த பிரியம் வைத்திருக்கிறார்கள், ஆனால் வெள்ளைத் தோலானது கருப்புத் தோலை விட பலவீனமானது என்ற உண்மை மிகவும் அறியப்படவில்லை. இதோ கருப்புத் தோல் எந்த வழிகளில் உங்களுக்கு தனித்துவமான நன்மையை அளிக்கிறது என்று பாருங்கள்:

இருப்பினும், நீங்கள் கருப்பு நிறமுடையவராக இருந்தால், நீங்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக, இருண்ட தோலில் சூரிய ஒளி படும்போது வைட்டமின் டி தயாரிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. எனவே கருப்பு நிறமுள்ளவருக்கு வெள்ளை நிறமுள்ளவரை விட வைட்டமின் டி குறைபாட்டு அதிகம் ஏற்படும், மேலும் அதைச ஈடுசெய்ய குறைநிரப்பிகள் தேவைப்படும். மேலும், கருப்புத் தோலுள்ளவர்களில் அளவுக்கதிக சூரிய ஒளி பட்டால், அவர்களுக்கு எளிதில் மிகையான நிறப்புள்ளிகள் -கருப்புப் புள்ளிகளின் வளர்ச்சி- தோன்றும். எனவே நீங்கள் கண்டிப்பாக மிகையான நிறப்புள்ளிகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும்!

கருப்புத் தோலுக்கு ஆயுர்வேதத்திலிருந்து தோல் பராமரிப்பு குறித்த பாடங்கள்

*உடல் ஆரோக்கியம் நன்கு பராமரிக்கப்படுகின்ற வகையில் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைக்கப்பட்டுள்ள டைனாச்சார்யா (தினசரி வழக்கமான நடைமுறை) மற்றும் ரிட்டுசார்யா (பருவகால நடைமுறை) ஆகியவற்றின் சூழலில் நடைமுறை மற்றும் சூத்திரங்களை ஆயுவேதம் பரப்புவதாக டாக்டர் மகேஷ் விளக்குகிறார். அபியங்கா, உத்வர்த்தனா, லெபானா போன்ற வெளிப்புற பூச்சுகள் மத்தியில், நோய்களை விரட்ட மட்டுமல்லாமல் தோலின் தொனி எப்படியிருந்தாலும் ஓர் ஆரோக்கியமான மற்றும் அழகான தோற்றத்தை கொடுக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆயுர்வேதச் செயல்முறைகளும் சூத்திரங்களும் அஸ்டாங்க ஹிருதயா, சரகா சம்ஹிதா மற்றும் சுஷ்ருதா சம்ஹிதா போன்ற பாரம்பரிய நூல்களில் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஹரேமேகலா போன்ற சில நூல்களும் கூட ஜொலிப்பான, வளமான மற்றும் இளமையான தோலைக் கொண்டிருக்கும் அழகுசாதனப் பொருட்களாகப் பயனளிக்கும் இத்தகைய சூத்திரங்களைப் பற்றி கூறுகின்றன.

ஆயுர்வேதம் என்பது 5000 ஆண்டுகால பழமையான மருத்துவ விஞ்ஞானம், பழங்கால நூல்கள் மற்றும் பல்வேறு உடல்நலக் குறைவுகளையும் குணப்படுத்தும் மூலிகைகள், மசாலா மற்றும் தாவரங்களின் இயற்கைப் பண்புகள் ஆகியவற்றின் போதனைகளைச் சார்ந்துள்ளது, மேலும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் உள்ளன. ஆயுர்வேதம் கூறுவதன்படி, வெளிப்புறத்தில் அழகாகத் தோற்றமளிப்பதற்கான முக்கிய அம்சமானது, தோஷங்கள் எனவும் அழைக்கப்படுகின்ற உட்புற உயிர்-ஆற்றல்களைச் சமநிலைப்படுத்துவதைச் சார்ந்துள்ளது, எனவே நீங்கள் உட்புறத்தில் ஆரோக்கியமாகவும் வெளிபுறத்தில் அழகாகவும் இருக்கிறீர்கள்.

மேற்கூறிய கொள்கைகளுடன் ஒருசீர்ப்படுத்துகின்ற உங்கள் அழகான, கருப்புத் தோலின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கான சில சிறந்த ஆயுர்வேத நடைமுறைகள் இங்கே உள்ளன.

1. உங்கள் தோஷத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்

அனைத்து மனித உடல்களும் 3 தோஷங்களால் – வாதம் , பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றால் ஆனவை. எனினும், ஒரு தனித்துவமான மட்டத்தில், ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ஒரு வகை தோஷம் அதிகமாக இருக்கும். இது தோல் வகையில் பிரதிபலிக்கும்.

எனவே, உங்கள் சருமத்தின் முக்கிய தோசத்தை நீங்கள் அறிந்தால், அதை நீங்கள் நன்கு பராமரிக்கலாம்.

2. உங்கள் தோல் வகையின்படி உங்கள் முகத்தைச் ஈரப்படுத்தவும்

வாத தோல் வகைக்கு தேங்காய் எண்ணெய் சார்ந்த மாய்ஸ்டரைசர்களைத் தடவி அல்லது லீவர் ஆயுஷ் மாஸ்டரைஸிங் கௌ கீ சோப் போன்ற கொழுப்பு சோப்புகளை உபயோகித்துக் குளித்து, நன்மை பெறலாம், அதேவேளை அதிக எண்ணெய்த்தன்மையான கப வகைக்கு, பயறு மாவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பேக்குகளை விட எண்ணெய் அகற்றும் ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்தினால் மேலும் பலன் கிடைக்கும்

3. கோடைக்காலத்தில் ஏற்படும் தோல் உரிவுக்கு சர்க்கரை பயன்படுத்தவும்

சில மேற்கத்திய ஆயுர்வேத பயிற்சியாளர்களின்படி , சர்க்கரைக்கு குளிர்விக்கும் தன்மை உள்ளது, அதனால் கோடைக் காலத்தில் தோலுரியும் முகமூடிகளில் அதைப் பயன்படுத்துவது சிறந்த ஒரு யோசனை. ரோஜா இதழ்கள் அல்லது பிரிங்கராஜில் போன்றவற்றிலும் குளுமையான பண்புகள் இருப்பதால் அவற்றை இந்தக் கலவையில் சேர்க்கலாம்.

4. காய்ச்சாத பாலை உபயோகித்து முகத்தைச் சுத்தம் செய்யவும்

ஆயுர்வேதம் பாலிலுள்ள அற்புதமான பண்புகளை அங்கீகரிக்கிறது, அதனால், ஏராளமான ஆயுர்வேத மருந்துகளில் இந்த உட்கூறுகள் கலவையாகச் சேர்க்கப்படுகின்றன. உங்கள் தோல் பராமரிப்பு முறையும் வித்தியாசமாக இல்லை. வெளியில் இருக்கும் போது உங்கள் முகத்தைத் துடைத்து, துளைகளின் அடைப்பைப் போக்க, காய்ச்சாத பாலில் தோய்த்த சூடான மற்றும் ஈரப்பதமான ஒரு பருத்திப் பந்தைப் பயன்படுத்தவும். ஒட்டுமொத்தமாக உங்கள் தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு காய்ச்சாத பாலில் குளிக்கவும் செய்யலாம்.

5. பருக்கள் மீது வேப்பெண்ணெய் பூசவும்

வேம்பு என்பது அதன் வேர் முதல் அதன் இலைகள் வரை மருத்துவ குணங்கள் நிரப்பி வைத்திருக்கும் ஒரு சக்தி வாய்ந்த மரம். அதனால்தான், ஆயுர்வேதம், பருக்கள் மீது வேப்ப்பெண்ணெயைப் பூசுமாறும் அதை ஓரிரவு அவ்வாறே விடுமாறும் பரிந்துரைக்கிறது, இவ்வாறு செய்வதால் அது வடு உருவாகுவதைத் தடுக்கிறது மற்றும் வேகமாக வெடிப்பு ஏற்படுவதைத் தீர்க்கிறது.

6. மஞ்சள் முக பேக்குகளைப் பயன்படுத்தவும்

மஞ்சள் அதன் மருத்துவ குணங்களின் காரணமாக, ஆயுர்வேதத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் மற்றொரு வேர். அது உங்கள் தோலுக்கும் கூட சிறந்தது! நீங்கள் பல வழிகளில் அதைப் பயன்படுத்தலாம் – வீட்டில் தயாரிக்கப்படும் ஃபேச் பேக்குகளில் சேர்த்தல், மஞ்சள் கலந்த பாலைக் குடித்தல், லீவர் ஆயுஷ் ஆன்டி-பிம்பிள் டர்மெரிக் ஃபேஸ் வாஷ் போன்ற மஞ்சள் சேர்த்த ஃபேஸ் வாஷ்களைப் பயன்படுத்துதல் போன்றவை.

* டாக்டர். மகேஷ் அவர்கள்அலிகார், ஜீவன் ஜோதி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, டிராவ்யகுணா துறை, துறைத் தலைவர் மற்றும் பேராசிரியராகவும் இருக்கிறார்

இந்தக் கட்டுரையைப் பகிருங்கள்!

கருப்பு நிறமுள்ள உங்கள் நண்பர்களிடம் சிறிது அன்பைக் காட்டுங்கள். அவர்களுடன் இந்தக் கட்டுரையைப் பகிர்ந்து கொள்ளுங்கள், அதனால் அவர்கள் தமது தோல் நிறம் குறித்து பெருமைப்படுவார்கள், அதை இளமையாக, அழகாக, செழிப்பாக எப்படி வைத்திருக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply