Categories
ஆரோக்கியம்

பரிசுத்தமான சருமத்தை பெற நீங்கள் பயன்படுத்த வேண்டிய ஒரு இயற்கை மூலிகை!

வெயில் காலத்தில் நமது சருமம் மிகவும் வறண்டு ஜீவனின்றி காட்சியளிக்கும், இதன் காரணங்கள். சருமத்தில் நீர்ச்சத்து குறைவதும் சூரியனின் தீங்கு விளைவிக்கும் ஒளிக்கதிர்களும் ஆகும். இதனை சரி செய்ய குங்குமப்பூ பெரிதும் கைகொடுக்கும். ஆரோக்கியம் மற்ற உடல்நலனை கொடுக்கும் நற்குணங்கள் ஒரு புறம் இருந்தாலும் அது சருமத்துக்கும் நன்மை தருகிறது. ஆயுர்வதத்தில் குங்குமப்பூ அதன் வர்ண்யா குணநலனுக்காக பயன்படுத்தப்படுகிறது. மசாலா பொருட்களின் ராஜாவாக கருதப்படும் இது சருமத்துக்கும் பல விதங்களில் நன்மை பயக்கிறது.

வர்ண்யா குண நலன் என்பது இயற்கையான முறையில் நிறம் கூட்டும் உட்பொருளை கொண்டுள்ளது என்பதாகும். எனவே அது சருமத்துக்கும் இயற்கையாகவே நிறத்தை கொடுக்கும் தன்மையை கொண்டுள்ளது. சுருங்க சொல்வதானால் அது சருமத்துக்கு பொலிவூட்டும் திறன் பெற்றதாகும். இதனாலேயே இது சரும பாதுகாப்புக்கான ஆயுர்வேத பிராடக்ட்களில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

ஆயுர்வேதத்தை பொருத்த வரையில் குங்குமப்பூ என்பது சருமத்துக்கு அபரிமிதமான பொலிவை நீண்ட காலம் வழங்கும் தன்மை கொண்ட ஒன்றாகவே கருதப்படுகிறது. அது பருக்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதாகும். எனவே, கோடையில் பயன்படுத்தும் பெரும்பாலான ஃபேஸ் பேக்குகளில் இதனை சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

குங்குமப்பூவின் குணங்கள்

குங்குமப்பூ த்ரிதோஷஹாரா என்று கருதப்படுகிறது. பருக்கள், மாசுமறு, கருவளையங்கள் மற்றும் வறண்ட சருமம் போன்ற சரும பிரச்சினைகளை தீர்க்க பரிந்துரைக்கப்படும் பெரும்பாலான ஆயுர்வேத மருந்துகளில் முக்கிய உட்பொருளாக குங்குமப்பூ கட்டாயம் இடம் பிடிக்கும்.

ஆயுர்வேதத்தின் பார்வையில், குங்குமப்பூவில் கீழ்கண்ட குணநலங்கள் உள்ளதாக கூறப்படுகின்றன:

குங்குமப்பூ மெல்லிய மற்றும் பிசுபிசுப்பான தன்மை கொண்டதாக கருதப்படுகிறது.

பொலிவான சருமம் பெற குங்குமப்பூவை எப்படி பயன்படுத்துவது

லீவர் ஆயுஷ், ஆயுர்வேத நிபுணரான டாக்டர். மஹேஷ் கூறும் கருத்து இதோ “ஆரோக்கியமான உடலையே பொலிவான சருமம் பிரதிபலிக்கிறது. அது போல அகத்தின் அழகை முகம் வெளிப்படுத்துகிறது. நமது அழகின் பிம்பம் நமது சருமத்தை பொருத்தே அமைகிறது, அதிக பொலிவுடன் நாம் திகழ்ந்தால் மற்றவரால் ஒப்புக்கொள்ளப்படுவோம். அழகான முகத்துக்கு அதிக ஒப்பனை தேவையில்லை ஆகவே மாசற்ற முகத்தை பெற பல மணி நேரங்களை செலவழித்து நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியமும் இல்லை.”

முதல் படி, முகத்தை பராமரிக்கையில், சருமத்தை ஆழ்ந்து சுத்தம் செய்தல் அவசியம். கேசர் அடங்கிய கும்குமாதி தைலம் கொண்ட ஃபேஸ் வாஷை அதற்கு பயன்படுத்தலாம். இது சருமத்தை வெண்மையாக்கி, மாசுகளை நீக்கி சருமத்துக்கு இயற்கையான பொலிவை தருகிறது.

அடுத்து சருமத்துக்கு போதிய ஈரப்பதத்தை தர வேண்டும். அதற்கு உஷிரா, நீலோப்ட்டல், லோத்ரா, மஞ்ஜிஷ்தா மற்றும் பத்மகஷ்தா ஆகிய மூலிகைகள் அடங்கிய மாயிஸ்சரைசர் தேவை. கேசர், உஷிரா, நீலோப்டல் மற்றும் லோத்ரா ஆகியவை சருமத்துக்கு இதமளிக்க கூடியவை. மஞ்ஜிஷ்தாமற்றும் பத்மகஷ்தா ஆகியவை சருமத்தில் உள்ள களங்கங்கள், கருப்பு திட்டுக்கள் மற்றும் இதர சரும முறைபாடுகளை நீக்குகின்றன.

ஆயுர்வேதத்தில் மிக மதிப்பு மிக்க பொருளாக கருதப்படும் குங்குமப்பூவை உங்களது தினசரி சரும பராமரிப்பில் சேர்த்துக் கொண்டால் சருமம் பளிச்சென்றும் அழகாக என்றென்றும் விளங்கும். உதாரணமாக, லீவர் ஆயுஷின் குங்குமப்பூ ஃபேஸ் க்ரீம் ஃபேஸ் வாஷ் மற்றும் சோப் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலமும் ஆயுர்வேத கஷாயங்களை உபயோகிப்பதன் மூலமும் குங்குமப்பூவின் நன்மைகளை பெறலாம். இதன் மூலம் வீட்டில் ஃபேஸ் பேக்குகள் மற்றும் கிரீம்களை தயாரித்தல் போன்ற வேலைகளை தவிர்க்கலாம்.

*டாக்டர். மஹேஷ் அலிகரில் உள்ள ஜீவன் ஜோதி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் த்ரவ்யகுணா பிரிவின் விரிவுரையாளரும் எச்ஓடி யும் ஆவார்.

Leave a Reply