என்னை கொல்ல நடந்த சதி..!அமைச்சர் ஒருவருக்கு முக்கிய பங்கு.!இலங்கை அதிபர் பரபரப்பு தகவல்

இலங்கையில் என்னை கொல்ல நடந்த சதியில் அமைச்சர் ஒருவருக்கும் பங்கு இருந்தது என்று இலங்கை அதிபர் சிறிசேனா பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 2015 வருடம் அதிபராக மைத்திரி பால சிறிசேனா பதவியேற்றார். பிரதமராக ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சிகளும் கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி 3 வருட ஆட்சியை இலங்கையில் நடத்தி வந்தது.இந்த நிலையில் நேற்று திடீரென பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றார்.

ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வந்தது.இலங்கையில் பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்ற நிலையில், அதற்கான அரசாணையையும் மற்றும் ஏற்கனவே பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கே பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கான அரசாணையையும், அதிபர் மைத்ரிபால சிறிசேனா வெளியிட்டார்.

அதை தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றம் வரும் நவம்பர் 16ம் தேதி வரை முடக்கப்படுவதாக, அதிபர் சிறிசேனவின் அறிவிப்பை, அமைச்சரவை செய்தி தொடர்பாளர் ரஜிதாசேன ரத்ன வெளியிட்டார்.

Related Post

குறிப்பாக சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பினார்.அதில் இலங்கை பாராளுமன்றத்தை நவம்பர் 16ஆம் தேதி வரை முடக்கிவைப்பது நாட்டில் தீவிர விளைவுகளை ஏற்படுத்தும். நாடாளுமன்றத்தை முடக்கும் முன் சபாநாயகருடன் ஆலோசித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதேபோல் இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பதாக சபாநாயகர் அங்கீகாரம் அளித்தார்.

இந்நிலையில்நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இலங்கை அதிபர் சிறிசேன விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் இலங்கையில் என்னை கொல்ல நடந்த சதியில் அமைச்சர் ஒருவருக்கும் பங்கு இருந்தது. கொல்ல சதி நடந்ததால் வேறு வழியின்றி ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டியதாயிற்று.ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையாக முடிவு எடுத்ததாலேயே பிரச்னை ஏற்பட்டது. கூட்டாக முடிவு எடுக்கக் கூடாது என்பதில் ரணில் பிடிவாதமாக இருந்தார்.இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படியே பிரதமரை மாற்றியதாகவும் அதிபர் சிறிசேன விளக்கம் அளித்துள்ளார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

1 year ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

1 year ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

1 year ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

1 year ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

1 year ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

1 year ago