Categories
அழகு குறிப்புகள் தலைப்புச்செய்திகள்

இந்த 9 ஆயுர்வேத முறைகள் உங்கள் தலை முடி பிரச்சினை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது..!

அழகான கூந்தல் இருக்க வேண்டும் என ஆண், பெண் இருவரும் அதிகம் விரும்புவார்கள். பெண்களுக்கு நீண்ட அடர்த்தியான முடி என்றால் அதிகம் பிடிக்கும். அதே போன்று, ஆண்களுக்கும் அழகான மென்மையான கருமை அதிகம் கொண்ட கூந்தல் என்றால் அலாதி பிரியம். ஏதோ ஒரு வகையில் ஆணின் முடியை பெண்ணிற்கும், பெண்ணின் முடியை ஆணிற்கும் பிடிக்கதான் செய்கிறது. கூந்தலில் இயற்கையிலே பலவித மணங்கள் இருப்பதாக பல கவிஞர்களும் கூறுவது வழக்கமே. முடியில் இயற்கையாக மனம் இருக்கிறதோ இல்லையோ… ஆனால் நாம் பயன்படுத்தும் ஒரு சில பொருட்கள்தான் அவற்றிற்கு ஒரு வித மணத்தை தருகிறது.

இதெல்லாம், ஒரு புறம் இருக்க முடியை பராமரிப்பதே ஒரு பெரிய கடமையாக உள்ளது.
பலருக்கு முடி சார்ந்த கவலையே அதிகம் இருக்கும். அதிக முடி உதிர்தல், வெள்ளை முடி, பொடுகு, பேன், வழுக்கை, இளநரை இவைதான் முதன்மையான பிரச்சினையாக இருக்கிறது. இவற்றை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என குழம்பி போய் இருக்கிறீர்களா..? இந்த பதிவில் உங்களுக்காகவே கூறப்படும் ஆயுர்வேத முறைகளை அறிந்து, பின் இதனை பயன்படுத்துங்கள்.

பலருக்கு ஏற்படும் இந்த முடி பிரச்சினைக்கு பலவித காரணங்கள் சொல்லலாம். சுற்றுசூழல் மாற்றம், சீரான உணவு இல்லாமை, நவீன உலகின் தாக்கம், கவனமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு… இப்படி பட்ட முக்கிய புள்ளிகளே முடி பிரச்சினைக்கு முதன்மை காரணமாக இருக்கிறது. இது முடியை மட்டும் பாதிக்காமல் முழு ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

இந்த 9 ஆயுர்வேத முறைகள் உங்கள் தலை முடி பிரச்சினை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது..! வழுக்கை தொல்லைக்கு டாட்…!

பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே இந்த வழுக்கை பிரச்சினை அதிகம் உள்ளது. இதனை குணப்படுத்த இந்த ஆயுர்வேத முறை பெரிதும் பயன்படும். வேப்ப எண்ணெய் தலைக்கு தேய்த்து வந்தால் அது தலையின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர செய்யும். வேப்ப எண்ணெய்யுடன் ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து தலைக்கு தடவி, 30 நிமிடம் மசாஜ் செய்யுள்கள். பின் குளிர்ந்த நீரில் தலையை அலசினால் முடி வளர தொடங்கும்.

இந்த 9 ஆயுர்வேத முறைகள் உங்கள் தலை முடி பிரச்சினை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது..! பொடுகை முற்றிலும் நீக்க…

அதிகமான தூசுகள் தலையில் சேர்வதால் அது பொடுகு போன்ற பிரச்சினையை உருவாக்க வல்லது. இது நாளடைவில் தலை முடி உதிர்வுக்கு முக்கிய காரணியாக மாற கூடும். இதனை சட்டென்று போக்குவதற்கு இந்த ஆயுர்வேத முறையே போதும். 2 முட்டை, 1 எலுமிச்சை பழ சாறு ஆகியவற்றை நன்கு கலந்து, தலைக்கு தேய்க்க வேண்டும். பின் வெதுப்பான வெதுப்பான நீரில் சிகைக்காய் பயன்படுத்தி குளித்தால் பொடுகு பிரச்சினை நீங்கும்.

இந்த 9 ஆயுர்வேத முறைகள் உங்கள் தலை முடி பிரச்சினை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது..! முடியின் போஷாக்கிற்கு…

முடியின் ஆரோக்கியம் அதன் வேரின் ஆரோக்கியத்தை பொருத்துதான் நிர்ணயிக்க படும். உடலில் வைட்டமின்- சி குறைபாடு ஏற்பட்டால் அது முடியையும் சேர்த்து பாதிக்கும். மேலும் தலையில் வறட்சியை ஏற்படுத்தும். 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர், 10 துளசி இலைகள் ஆகியவற்றை நன்கு அரைத்து தலைக்கு தேய்த்து வந்தால், வறண்ட தலை ஈரப்பதத்துடன் இருக்கும். அத்துடன் முடியும் அதிக போஷாக்கை அடையும்.

இந்த 9 ஆயுர்வேத முறைகள் உங்கள் தலை முடி பிரச்சினை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது..! கூந்தல் உதிர்வை நிறுத்தும் வெந்தயம்..!

வெந்தயத்தின் மருத்துவ தன்மையை பற்றி நமக்கு தெரியும். ஆனால் அது முடியின் ஆரோக்கியத்திற்கும் இவ்வளவு உதவுகிறதா..! என்பது சற்றே ஆச்சரியமான விஷயம் தான். அடிக்கடி தலை முடி உதிர்வு ஏற்படுபவர்களுக்கு ஒரு நல்ல தீர்வு வெந்தயந்தான். ஒரு நாள் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்த வெந்தயத்தை எடுத்து மைய அரைத்து, அதனுடன் 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை முடியின் அடி வேரில் தடவி 30 நிமிடம் கழித்து தலையை அலசினால் முடி உதிர்வு குறையும்.

இந்த 9 ஆயுர்வேத முறைகள் உங்கள் தலை முடி பிரச்சினை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது..! நோய் தொற்றுகளுக்கு..

தலையில் ஏற்படும் புண், அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை சரி செய்ய ஆயர்வேதத்தில் அற்புதமான முறை பின்பற்ற படுகிறது. நாம் பயன்படுத்தும் ஷாம்புக்களை தவிர்த்து இந்த முறையை உபயோகித்தாலே போதும், உங்கள் தலையில் வரும் நோய் கிருமிகளை அழித்து விடலாம். 3 டீஸ்பூன் சிகைக்காய் தூள், 3 டீஸ்பூன் நெல்லிக்காய் பவ்டர், சிறிது வெப்பங்கொழுந்து ஆகியவற்றை எடுத்து நன்றாக நீரில் கலந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் அடுத்த நாள் இதனை தலைக்கு தேய்த்தால் தலை முடி தொற்றுகள் நீங்கும்.

இந்த 9 ஆயுர்வேத முறைகள் உங்கள் தலை முடி பிரச்சினை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது..! பேன் தொல்லையில் விடுபட…

அதிக பெண்களுக்கு இருக்கும் பிரச்சினை பேன் தொல்லைதான். அழுக்குகள் அதிகம் சேர்வதால் இவை தலையில் உருவாகிறது. பேன் உருவாகினால் கூடவே பொடுகு, முடி உதிர்வு போன்ற இடையூறுகளும் ஒட்டி கொள்ளும். இதனை சரிசெய்ய, வேப்ப எண்ணையை தலைக்கு தடவி, வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். இதில் உள்ள அசடிர்ச்சின்ட்டின் (azadirachtin) என்ற மூல பொருள் பேன்களை அழிக்க வல்லது.

இந்த 9 ஆயுர்வேத முறைகள் உங்கள் தலை முடி பிரச்சினை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது..! முடியின் முழு ஆரோக்கியத்திற்கு..

அதிக மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளில் முதன்மையானது அஸ்வகந்தா. ஹார்மோன் பிரச்சினையினால் முடி உதிரும் பலருக்கும் இது நல்ல நண்பன் போல உதவும். 3 டீஸ்பூன் அஸ்வகந்தா பவுடர், 3 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றை எடுத்து, தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு கலந்து தலையில் தடவி மசாஜ் செய்யவும். பின் 30 நிமிடம் கழித்து தலையை அலச வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் தலை முடி பிரச்சினைகள் குணமாகும்.

இந்த 9 ஆயுர்வேத முறைகள் உங்கள் தலை முடி பிரச்சினை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது..! இளநரைகளை கருமையாக்க…

வெள்ளை முடிகளை தடுக்கும் தன்மை மருதாணிக்கு உள்ளது. அத்துடன் வெள்ளை முடி இருப்பவர்கள் இதனை பயன்படுத்தினால் முடியின் வெள்ளை தன்மை மாறும். உங்கள் முடி பொலிவுடன், மினுமினுப்பாக இருக்க மருதாணி பவ்டரை தலைக்கு தேய்த்து குளியுங்கள். அல்லது மருதாணி பவ்டரோடு சிறிது நெல்லி பவ்டரையும் சேர்த்து, தயிரில் 3 மணி நேரம் ஊற வைத்து தடவினால் முடியின் நரையை தவிர்க்கலாம். மேலும் முடி உடைவதையும் இது குணப்படுத்துகிறது.

source: boldsky.com

Leave a Reply