டில்லி
சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் செயலர் காங்கிரஸ் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்பதை ராகுல் காந்தி முடிவு செய்வார் என அறிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் செயலராக பி எல் புனியா கடந்த 2017ஆம் வருடம் ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். அதற்கு 18 மாதங்கள் கடந்து நிகழ்ந்த இடைத் தேர்தலில் பாஜகவை பல இடங்களில் காங்கிரஸ் தோற்கடித்தது. இதை ஒட்டி ஆங்கில நாளேடு ஒன்று புனியாவை பேட்டி கண்டுள்ளது.
அந்த பேட்டியில் புனியா, “முந்தைய 2003, 2008 மற்றும் 2013 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. எதிர்க்கட்சிகள் இணைந்து எந்த ஒரு வேட்பாளரையும் நிறுத்தவில்லை.
இதனால் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பிரிந்து போய் விட்டன. அப்படி இருந்தும் வாக்கு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது.
நாங்கள் கடந்த 2003 ஆம் வருடம் இணைந்து போட்டியிட்டு இருந்தாலே பாஜகவை தோற்கடித்திருக்க முடியும். அதை தற்போது நாங்கள் புரிந்துக் கொண்டோம். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பல குழறுபடிகளால் ஏழைகள் கடும் துயரத்தில் உள்ளனர். பாஜகவுக்கு எதிரான அலை மாநிலம் முழுவதும் வீசுகிறது.
தற்போது காங்கிரஸ் அணியில் எந்த கட்சிகள் இணையும் என்பதை இப்போது உறுதியாக கூற முடியாது. ராகுல் காந்தி இது குறித்து முடிவு எடுப்பார். அதன் பிறகு அந்தக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளோம்.” எனக் கூறி உள்ளார்.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…