நள்ளிரவில் அரசு ஆவணங்கள் எரிப்பு? தாசில்தார், போலீசார் விசாரணை

நள்ளிரவில் அரசு ஆவணங்கள் எரிப்பதாக தகவல் கிடைத்தவுடன், கிராம மக்கள் திரண்டதுடன், தாசில்தார் உள்பட அதிகாரிகள் மற்றும் போலீசாரும் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது செங்குறிச்சி. இந்த ஊரின் உப்பு ஓடையில் நள்ளிரவில் டெப்போ வேனில் வந்து அரசு ஆவணங்களை கொளுத்துவதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கிராம இளைஞர்கள் சிலர் ஓடிச் சென்று பார்த்துள்ளனர்.

வருவாய்த்துறை மூலமாக வழங்கப்படும் உழவர் அட்டை, சாதி மற்றும் வருமானம், முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்த மனுக்கள், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி மற்றும் சேலைகளும் கொளுத்தப்பட்டு கிடந்தன.
இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை தாசில்தார் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் போலீசாருடன் வந்து விசாரணை மேற்கொண்டார்.

இது சம்மந்தமாக அப்பகுதி மக்கள், செங்குறிச்சியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் எல்லை ஆரிநத்தம், நகர், செம்மணங்கூர், காந்தி நகர், சேந்தநாடு, நடுக்குப்பம், பூமாம்பாக்கம் உள்பட 22 கிராமங்கள் உட்பட்டது. இந்த பகுதியின் கிராம மக்கள் அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்து சான்றிதழ் பெறவும், சமூக நலத்திட்ட உதவிகள் பெறவும் கிராம நிர்வாக அலுவலர் மூலம் செங்குறிச்சி அலுவலத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைப்பார்கள். பின்னர் இங்கிருந்து உயர் அதிகாரிகளுக்கு இந்த விண்ணப்பங்கள் அனுப்புவார்கள். இவற்றைப் பார்க்கும்போது இந்த விண்ணப்பங்கள் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பாமலேயே இருப்பதாக தெரிய வருகிறது என்று குற்றம் சாட்டினர்.

Related Post

தாசில்தார் ராஜேந்திரனோ, கடலூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கிராம அதிகாரியாக பணியாற்றினார். இப்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார். அவர் பணியில் இருக்கும்போது உளுந்தூர்பேட்டையில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். அந்த வீட்டை காலி செய்ய சொன்னதால் தன்னிடம் வந்த பல விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பயன் கிடைத்தும், அந்த விண்ணப்பங்களை அப்படியே வைத்திருந்தார். இப்போது வீட்டை காலி செய்ய சொன்னதால் அவைகளை இங்கு வந்து கொட்டி எரித்துள்ளார். உளுந்தூர்பேட்டையில் எரித்தால் பெரும் புகை வந்து டவுனில் புகார் கூறுவாரகள் என்று நினைத்து இங்கு வந்து எரித்துள்ளார் என தெரிவித்தார்.

அப்படியானால் வேட்டி, சேலையும் எரித்துள்ளார்களே என்றதற்கு, அந்த வேட்டி, சேலைகள் டேமேஜ் உடையது. இதை பயனாளிகளுக்கு வழங்க முடியாது என்பதால் அதனையும் எரித்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருநாவலூர் கிராமத்தில் இதேபோல் மனுக்கள் எரிக்கப்பட்டு கிடந்தன. ஆகையால் இதன் உண்மைத்தன்மையை அரிய உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்கிறார்கள் கிராம மக்கள்.

எஸ்.பி.சேகர்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago