காமன்வெல்த் உச்சிமாநாட்டில் மோதி : இந்தியாவுக்கு என்ன கொண்டு வருவார்?

கடந்த வருடம் நவம்பர் மாதம் இளவரசர் சார்லஸ் இந்தியாவுக்கு வந்திருந்தபோது இங்கிலாந்து ராணி தந்த ஒரு கடிதத்தை மோதியிடம் கொடுத்தார். இந்த வாரம் லண்டனில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டில் பிரதமர் மோதி பங்கேற்க பிரத்யேக அழைப்பு ராணியிடம் இருந்து வந்திருந்தது.

அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோதி லண்டனில் இன்றும் நாளையும் (ஏப்ரல் 19 -20) நடக்கவுள்ள காமன்வெல்த் நாடுகளின் அரசுத்தலைமை கூட்டத்தில் (CHOGM) பங்கேற்கிறார். கிட்டதட்ட ஒரு தசாப்த இடைவெளிக்கு பிறகு காமன்வெல்த் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

மோதிக்கு இந்த சிறப்பு அழைப்பு ஏன்?

”பிரிட்டனுக்கு மிகவும் முக்கியமான விஷயம் என்னவெனில் பிரெக்சிட்டுக்கு பிந்தைய காலகட்டத்தில் இங்கிலாந்துக்கு அயலக முதலீடு மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. அதற்காகவே மோதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது” என்கிறார் டெல்லியில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனைச் சேர்ந்த ஜெயஸ்ரீ சென்குப்தா.

இது இந்தியா பிரிட்டன் இரண்டுக்குமே வெற்றி பெற வேண்டிய அவசியம் உள்ள சூழ்நிலை.

காமன்வெல்த் குழுவில் உள்ள 53 நாடுகளில் தனது வியூகத்தை உலகளவில் விரிவடையச்செய்ய இந்தியாவுக்கு அக்குழு ஒரு தளம் அமைத்துத் தருகிறது.

காமன்வெல்த் குழு சீனா இல்லாத ஒரு தளமாகும். இதனால் உலக அரங்கில் தனது பெரிய போட்டியாளரான சீனாவின் நிழலில் மறையாமல் இக்குழுவில் நேரடியாக இந்தியா செயல்பட முடியும்.

காமன்வெல்த்தின் 240 கோடி மக்கள் தொகையில் இந்தியா 55% பங்கை கொண்டிருக்கிறது. 2010-க்கு பிறகு காமன்வெல்த் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் இந்தியப் பிரதமரான மோதிக்கு அங்கே என்ன கிடைக்கவுள்ளது என்பதை பார்ப்பது சிறப்பாக இருக்கும்.

நரேந்திர மோதி 2015 உச்சி மாநாட்டைத் தவிர்த்தார். அவருக்குமுன் அப்பதவியில் இருந்த மன்மோகன் சிங்கும் 2011, 2013 ஆண்டுகளில் பங்கேற்கவில்லை.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு காமன்வெல்த் குழுவில் இந்தியாவை இணைத்தார். ஆனால் அதற்குப்பின் வந்த பிரதமர்கள் காமன்வெல்த் குழுவில் ஈடுபாடு காட்டவில்லை. காமன்வெல்த் காலனியாதிக்கத்தின் மிச்சமாக அவ்வப்போது பார்க்கப்படுகிறது.

காமன்வெல்த்தின் உயிர்ப்பு – இந்தியாவுக்கு நடைமுறையில் இது என்ன அர்த்தத்தை தருகிறது?

தாராள வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி மற்றும் திறன் வளர்ச்சி ஆகியவற்றில் தனது நிலையை எடுக்க காமன்வெல்த் தளத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ள முடியும்.

லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரியில் சர்வதேச தொடர்புகள் பேராசியர் ஹர்ஷ் பன்ட் பிபிசியிடம் பேசுகையில், ” இந்தியா தாராள வர்த்தகத்தில் ஈடுபட இக்குழுவை ஒருங்கிணைத்து அதன் மூலம் உலக வர்த்தக அமைப்பில் தான் விரும்பும் விஷயங்களை விவாதிக்க அழுத்தம் தரமுடியும். அதில் பொருளாதார வெளிப்படைத்தன்மைக்கு அழுத்தம் கொடுப்பது, பொருளியல் ரீதியான பாதுகாப்பு வாதத்துக்கு எதிரான அழுத்தம் தருவது ஆகியவை அடக்கம். மேலும் இவை இந்தியாவின் வர்த்தக திறனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம்” என்றார்.

உறுப்பினரல்லாத நாடுகளை விட காமன்வெல்த் நாடுகளுக்குள் வர்த்தகம் செய்யும்போது 19% வரை செலவு குறைகிறது.

பேராசிரியர் பன்ட் மேலும் கூறுகையில், ” காமன்வெல்த் குறித்து பெரிய அளவில் அறிந்திராத இளம் இந்தியர்களுக்கு தாராள வர்த்தகத்தின் மூலம் மறைமுகமாக பலன் கிடைக்கும். அதாவது இத்தகைய வர்த்தகம் பல புதிய வேலைகளை உருவாக்கும்.

காமன்வெல்த்தை பொதுச் சந்தைகள் பெரியளவில் உருவாகும் ஒரு தளமாக அல்லது பொதுவான வர்த்தக நிலைப்பாடு எடுப்பதற்குச் சாத்தியமுள்ள இடமாக நீங்கள் பார்க்கத்தொடங்கினால் மற்ற தளங்களில் இந்தியாவின் பேர வலிமையை உயர்த்தும் . குறிப்பாக இறக்குமதி வரிகள் விஷயத்தில் இந்தியா மேலும் அழுத்தம் கொடுக்க சிறந்த வழியாக இது இருக்கும் ” என்கிறார்.

காமன்வெல்த்தை இந்தியா முன்னெடுத்துச் செல்லுமா?

காமன்வெல்த் குழுவுக்கு இந்தியாவை தலைமை தாங்குமாறு கேட்பது குறித்த பேச்சுக்கள் நடந்தவண்ணம் உள்ளன. எனினும் பிரிட்டன் இந்தியாவிடம் காமன்வெல்த் தலைமையை ஏற்றுக்கொள்ளச் சொல்லி கோரிக்கை விடுப்பது குறித்த யோசனை மிகவும் ஆரம்பக் கட்டத்தில் இருக்கலாம் என மும்பை பல்கலைகழக பேராசிரியர் உத்தாரா சஹஸ்ரபுத்தே கூறுகிறார்.

” இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் இயல்பு மற்றும் அதன் ராஜீய நடத்தை ஆகியவற்றை நீங்கள் பார்த்தால் இந்தியா தயக்கமுள்ள ஒரு வளரும் சக்தியாக உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மோதி அரசின் சில முயற்சிகள் இதற்கு முக்கிய காரணம். மற்ற சிறிய பிராந்திய அண்டை நாடுகளை தம்முடன் சேர்த்துக் கொண்டு பாகிஸ்தானுடனான நிலைப்பாட்டை கடுமையாக்குவது ; சர்வதேச சூரிய சக்தி கூட்டணியை அமைக்க முயற்சிகளை முன்னெடுப்பது போன்றவையே அந்த முயற்சிகள்.

எனினும் சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் புது தில்லி தமது அருகில் மற்றும் தூரத்தில் உள்ள அண்டை நாடுகளுடனான தமது உறவுகளில் பாதுகாப்புணர்வோடு இருக்கவே விரும்புகிறது. மாலத்தீவில் சமீபத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலையில் தலையிடுவதில் இந்தியாவுக்குத் தயக்கம் இருந்தது. தலாய் லாமா நிகழ்ச்சியில் பங்கெடுக்க வேண்டாம் என அரசு அதிகாரிகளை கேட்டுக்கொண்டதன் மூலம் சீனா மீதான இந்தியாவின் நிலைப்பாட்டில் எதிர்பார்க்காத மாற்றம் தெரிகிறது.

தொடர்ந்து வளர்ந்து வரும் பொருளாதாரம் இந்தியாவுக்கு இருந்தாலும் மற்ற நாடுகளில் முதலீடு செய்யும் திறன் அந்நாட்டுக்கு இல்லை. இவை இந்தியாவை வளர்ந்து வரும் சக்தியாக இருக்கக்கூடிய தோற்றத்தையும் அதற்கான வாய்ப்புகளையும் குறைக்கும்” என்கிறார் உத்தாரா சஹஸ்ரபுத்தே.

காமன்வெல்த் என்பது என்ன?

1931-ல் நிறுவப்பட்டது. காமன்வெல்த் என்பது பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த இருந்த நாடுகள் மற்றும் வேறு சில நாடுகளின் கூட்டமைப்பாகும். இதன் நோக்கம் வளர்ச்சிக்கான விஷயங்கள்.

Related Post

காமன்வெல்த் நாடுகளின் அரசுத் தலைவர்கள் கூட்டமானது (CHOGM) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பர். ஒவ்வொரு உச்சி மாநாடும் நாட்டுத் தலைவர்கள் அவர்களது நட்பு நாடுகளின் தலைவர்களைப் பார்க்கவும், உறவுப் புரிதலை மேம்படுத்துவதற்கான தளத்தை தருகிறது.

காமன்வெல்த் குறித்த தகவல்கள்

** ஆறு கண்டங்களிலும் சேர்த்து 53 உறுப்பினர்களை கொண்டிருக்கிறது காமன்வெல்த் குழு.

** ஆப்பிரிக்காவில் 19 நாடுகள், ஆசியாவில் 7 நாடுகள், கரீபியன் மற்றும் அமெரிக்காவில் 13 நாடுகள், ஐரோப்பாவில் மூன்று நாடுகள், பசிபிக்கில் 11 நாடுகள் ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன.

** காமன்வெல்த் குழுவில் இடம் பெற்றுள்ள நாடுகளின் மொத்த மக்கள் தொகை 2.4 பில்லியன் ஆகும். இது உலக மக்கள்தொகையில் 30 சதவீதம்.

** இந்தியா மிகவும் பிரபலமான உறுப்பு நாடாகும். 1.2 பில்லியன் மக்கள் தொகை, 1,635 மொழிகள், காமன்வெல்த் மக்கள் தொகையில் 55% ஆகியவற்றை கொண்டுள்ளது இந்தியா.

** காமன்வெல்த் மக்கள் தொகையில் 60 % பேர் முப்பது வயதுக்குட்பட்டோர். மேலும் 1 பில்லியன் மக்கள் 25 வயதுக்குட்பட்டோர் ஆவர்.

** கூட்டு தேசிய வருவாய் – 10.7 டிரில்லியன் டாலர்கள்

** உறுப்பினரல்லாத நாடுகளுடனான உறவை ஒப்பிடுகையில் காமன்வெல்த்தில் இடம்பெற்றுள்ள நாடுகள் தங்களுக்கு இடையே வர்த்தகம் செய்கையில் 19% செலவு குறைகிறது.

** ஜி 20, ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய மற்றும் ஆபிரிக்கன் ஒன்றியம் ஆகியவற்றில் காமன்வெல்த் பிரிதிநிதித்துவம் உள்ளது.

** ஐ.நா. உறுப்பு நாடுகளில் 25 சதவீதத்தைக் கொண்டிருக்கிறது.

** பசிபிக்கில் உள்ள நவ்ரூ எனும் தீவு நாடுதான் மக்கள் தொகை (10,000) மற்றும் பரப்பளவு (21 கிமி2) ஆகியவற்றில் குறைந்த நாடாகும்.

பிரிட்டனுக்கு இதில் என்ன லாபம் மற்றும் என்ன சவால்கள்?

உலக அரசியலில் பிரிட்டனுக்கு தற்போது புதிய அடையாளம் தேவைப்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

புதிய நாடுகளை உள்ளே கொண்டுவருவது, புதிய நாடுகளுக்குச் செல்லுதல் புதிய தளம் அமைப்பது ஆகியவற்றை பிரிட்டன் செய்ய நினைக்கிறது. அதற்கு பிரிட்டன் நினைப்பதைச் செய்ய ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மேடையாக உள்ளது என எண்ணுகிறார் பேராசிரியர் ஹர்ஷ் பன்ட்.

ஆனால் கரீபியன் முதலான நாடுகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் ஓர் முக்கிய கவலை உள்ளது. பிரிட்டன் மிகவும் பாதுகாப்பு வாதத்தில் கவனம் செலுத்தும் நாடாக உள்ளது. உதாரணமாக பிரிட்டனின் விசா விதிகள். இதுவே இந்தியா மற்றும் ஏனைய காமன்வெல்த் நாடுகளின் கவலையாக உள்ளது.

மும்பை பல்கலைகழக பேராசிரியர் உத்தாரா கூறுகையில் பிரெக்சிட்டுக்கு பிந்தைய காலகட்டத்தில் காமன்வெல்த் குழுவில் பிரிட்டன் சாதிக்க வேண்டிய முக்கிய குறிக்கோள்கள் அரசியல் மற்றும் பொருளாதாரம் என்றார்.

” காமன்வெல்த்தில் வரலாற்றில் பிரிட்டன் அந்தக் குழுவை முன்னின்று வழி நடத்தியுள்ளது. 53 உறுப்பினர் நாடுகள் கொண்ட அந்த குழுவில் பிரிட்டனின் தலைமை கிட்டத்தட்ட கேள்விக்கப்பாற்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினானாலும் உலகின் மொத்த நிலப்பகுதியில் 20 சதவீதம் உலகின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு வைத்துள்ள காமன்வெல்த் குழுவுவின் தலைமைப் பொறுப்பில் பிரிட்டன் உள்ளது.

இது அதன் இரண்டாவது குறிக்கோளை அடைய உதவும்.

காமன்வெல்த் நாடுகள் உலக நாடுகளின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 15% (2014 கணக்குப்படி) பங்களிப்பு செய்கின்றன. உலகின் வேகமாக வளர்ந்து வரும் 10 நகரங்களை இவை கொண்டுள்ளன. மேலும் கிட்டத்தட்ட உலகின் மொத்த இளைஞர் மக்கள் தொகையில் ஒரு பில்லியன் நபர்களை கொண்டுள்ளது. இது குழுவுக்குள்ளான வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்துக்கு மகத்தான ஆற்றலாகும்.

தற்போது சவால் என்னவெனில், இந்த ஆற்றலை எப்படி வெற்றிகரமாக பயன்படுத்துவது என்பதே. இந்த வாரம் நடக்கவுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டில் உறுப்பு நாட்டின் தலைவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? பொது முன்னேற்றத்துக்கான பொதுவான நோக்குடன் எதை எடுத்து வரப்போகிறார்கள் என்பதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

பிற செய்திகள்:

source: bbc.com/tamil

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago