Categories
தலைப்புச்செய்திகள்

நிறைவேறாத கடைசி ஆசை…. ஸ்டீபன் ஹாக்கிங்-ன் நிறைவேறாத ஆசை

லண்டன்: நிறைவேறாத கடைசி ஆசை… இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்-ன் நிறைவேறாத ஆசை பற்றி தெரிய வந்துள்ளது.

இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணமடைந்துள்ள நிலையில் தாஜ்மகாலை பார்க்கவேண்டும் என்ற அவரது ஆசை, கடைசிவரை நிறைவேறாமலேயே சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த 2001, ஜனவரியில் இந்தியா வந்தார். மும்பையில் நடந்த சர்வதேச இயற்பியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றினார். தனது 59வது பிறந்த நாளை (ஜனவரி -8) மும்பை, ஒபராய் ஓட்டலில் கொண்டாடினார்.

‘இந்தியர்கள் கணக்கு மற்றும் இயற்பியலில் வல்லவர்கள்,’ என பாராட்டினார்.
இந்தியாவில் செங்கோட்டை, குதூப்மினார், ஜந்தர் மந்தர், தாஜ்மகால் உட்பட இடங்களை பார்க்கவேண்டும் என்று விரும்பினாராம்.

குதூப் மினார் உள்ளிட்ட தொல்லியல் சிறப்புமிக்க இடங்களை பார்வையிட்ட ஹாக்கிங் கட்டடத்திறமையை கண்டு வியந்துபோனார்.

தாங்கள் பார்த்த இவ்விடங்களில் ஏதேனும் மாறுதல் செய்யவேண்டும் என்று தாங்கள் தெரிவித்தால், அவற்றை பரிசீலனை செய்ய தயாராக இருப்பதாக இந்திய தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஹாக்கிங்கின் சார்பில் அவ்விதமான எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. இந்த இடங்களை பார்வையிட்ட ஸ்டீபன் ஹாக்கிங்கால் கடைசிவரை தாஜ்மகாலை பார்க்க இயலவில்லை.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசிவரை நிறைவேறாத ஆசையாக தாஜ்மகால் இருந்துள்ளது.

Leave a Reply