நேட்டோ ஆதரவை குறைப்போம்: அமெரிக்கா எச்சரிக்கை

பெல்ஜியம்:

நேட்டோவுக்கான ஆதரவை குறைக்கப்போம் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். நேட்டோவுக்கு கூடுதல் நிதி அளிக்கவேண்டும். இல்லையென்றால் அந்தப்படைக்கு அளித்து வரும் ஆதரவை நாங்கள் குறைப்போம் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேத்திஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க கூட்டுப்படை என்றழைக்கப்படும் நேட்டோவில் 28 உறுப்பு நாடுகள் உள்ளன.
இந்தப் படைக்கு அமெரிக்கா கூடுதல் நிதி ஒதுக்கி வருகிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு நேட்டோ தொடர்பான கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

Related Post

இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நேட்டோ பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேத்திஸ், நேட்டோவில் உறுப்பினராக உள்ள ஒவ்வொரு நாடும் தங்களின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 2 சதவீதத்தை பாதுகாப்புக்காக ஒதுக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான நாடுகள் தங்களின் உறுதிமொழியை காப்பாற்றவில்லை என்றார்.

இனிமேலாவது நேட்டோவுக்கு கூடுதல் நிதி அந்தநாடுகள் ஒதுக்கவேண்டும். இல்லையென்றால், அந்தப் படைக்கான ஆதரவை அமெரிக்கா குறைத்துக் கொள்ளும் என்றார். தற்போதைய நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், எஸ்தானியா, கிரீஸ், போலந்து ஆகிய நாடுகள் மட்டுமே நேட்டோவுக்கு அதிக நிதி அளித்து வருகின்றன.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

1 year ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

1 year ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

1 year ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

1 year ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

1 year ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

1 year ago