குடிசையில் புகுந்து எம்.ஜி.ஆர். பாணியில் பாட்டியை கட்டிப் பிடித்த சசிகலா !

சென்னை: கூவத்தூரில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களை சந்திக்க சென்ற சசிகலா குடிசை பகுதி மக்களை திடீரென சந்தித்து பேசினார்.

எம்.ஜி.ஆர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக கடந்த 27 ஆண்டுகளாக ஜெயலலிதா இருந்து வந்தார். அவரது மறைவுக்கு பின்னர் கட்சியை கைப்பற்றினார் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இதையடுத்து ஆட்சியையும் கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். இதற்காக எம்.எல்.ஏக்களையும் கடத்தி கூவத்தூரில் அடைத்து வைத்துள்ளார்.

இதனிடையே சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து எம்.பி., எம்.எல்.ஏக்களின் ஆதரவும் அவருக்கு அதிகரித்து வருகிறது.
யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற பரபரப்பும் நிலவி வருகிறது. பொது மக்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஆனால் சசிகலா எம்.எல்.ஏ.,க்களை மட்டுமே நம்பி இருக்கிறார். கூவத்தூரில் ரிசார்ட்டில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏ.,க்களை சசிகலா தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார். 2 நாட்களாக ஏற்கனவே சந்தித்து தம்மை ஆதரிக்கும்படியும், கேட்டுக்கொண்ட சசிகலா இன்றும் ரிசார்ட்டுக்கு சென்றார்.

Related Post

அப்போது திடீரென மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பாணியில் அந்தப் பகுதியில் உள்ள குடிசைக்குள் புகுந்து ஒரு பாட்டியை கட்டிப் பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அப்போது அங்கிருந்தவர்கள் ஆட்சியை கைப்பற்ற என்ன வெல்லாம் செய்கிறார்கள் என்ற முனுமுனுத்தனர்.

ஒருபுறம் எம்.ஜி.ஆர்., பாணியில் வீட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு முதல்வர் பன்னீர்செல்வம் உணவு வழங்கி அசத்தி வருகிறார். தற்போது சசிகலாவும் அதே பாணியை பின்பற்றத் தொடங்கியுள்ளார்.

source: oneindia.com

Share
Tags: oneindia

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

1 year ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

1 year ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

1 year ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

1 year ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

1 year ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

1 year ago