கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் உர்ஜித் படேல் தலைமையிலான நிதிக் கொள்கை குழு தனது 3-து நிதிக்கொள்கை அறிவிப்பில் கடனுக்கான வட்டியை மாற்றம் செய்யாமல் அறிவித்தது. இதையடுத்து, குறுகியகால கடனுக்கான வட்டி 6.25 சதவீதமாகத் தொடர்கிறது.

நிதிக்கொள்கை

ரிசர்வ் வங்கி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கை ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த நிதி ஆண்டின் 6-வது நிதிக்கொள்கை ஆய்வறிக்கையை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது.

புதிய முறை

ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஆகியவற்றின் சார்பில் அமைக்கப்பட்ட புதிய குழுவில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், துணை கவர்னர் ஆர்.காந்தி, ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் மைக்கேல் பாத்ரா ஆகியோரும், மத்திய அரசு சார்பில் இந்திய புள்ளியியல் கழகத்தின் பேராசிரியர் சேதன் கதே, டெல்லி பொருளாதார கல்லூரியின் இயக்குநர் பாமி துவா மற்றும் ஐ.ஐ.எம்.
அகமதாபாத் பேராசிரியர் ரவீந்திர தோலகியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு தனது 3-வது அறிக்கையை நேற்று வெளியிட்டது.

மாற்றமில்லை

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டியான ரெப்போ ரேட் 6.25 சதவீதமாகத் தொடர்கிறது. வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன், வைப்புத்தொகைக்கான வட்டி( ரிவர்ஸ் ரெப்போ ரேட் ) 5.75 சதவீதமாகவும் தொடர்ந்து மாற்றமில்லாமல் நீடிக்கிறது.

வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருப்பு வைக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம் குறித்து அறிவிப்பு இல்லை என்பதால், ஏற்கனவே இருந்த 4 சதவீதமாக நீடிக்கிறது.

வளர்ச்சி குறைப்பு

இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Related Post

பிரதமர் மோடியின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, நவம்பர், டிசம்பர் மாதத்தில் நாட்டில் பெரும்பாலான தொழில்துறை நடவடிக்கைகளையும், வர்த்தக நடவடிக்கைகளையும் பாதித்துள்ளது. நிறுவனங்கள் பணியாளர்களுக்கு ஊதியம் அளிப்பதில் தாமதம், மூலப்பொருட்கள் வாங்குவதில் சிரமம் உள்ளிட்ட பல இடையூறுகள் ஏற்பட்டதால் பொருளாதார வளர்ச்சி பாதித்துள்ளது. அதேசமயம், அடுத்த நிதியாண்டில் 7.4 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கத்தைப் பொருத்தவரை, சில்லரை பணவீக்கம் 4.8சதவீதத்தில் இருந்து 4.9 சதவீதமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை அம்சங்கள்

* குறுகியகால கடனுக்கான வட்டி 6.25 சதவீதம்

* ரிவர்ஸ் ரெப்போ ரேட் 5.75 சதவீதம்

* ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதம்

* பொருளாதார வளர்ச்சி 6.9 ஆக குறைப்பு

* பணவீக்கம் இலக்கு 2017-18ம் நிதியாண்டின் முதல்பாதியில் 4-4.5 வரை உயரலாம்

* கச்சாஎண்ணெய் விலை, டாலருக்கு நிகரான ரூபாய் நோட்டு மதிப்பு, 7-வது ஊதிய குழு ஆகியவற்றால் பணவீக்கம் உயர வாய்ப்பு

* அடுத்த நிதிக்கொள்கை ஆய்வறிக்கை ஏப்ரல் 5-6

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago