”மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம்”.. காங்கிரஸ் வெள்ளை அறிக்கை வெளியீடு

டெல்லி:

”பொருளாதாரத்தின் உண்மையான நிலைமை” என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சி ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த வெள்ளை அறிக்கையை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார். ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக பொறுப்புள்ள எதிர்கட்சியாக காங்கிரஸ் இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு வருகிறது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், எம்பி ராஜீவ் கவுடா ஆகியோரது மேற்பார்வையில் தயாரான இந்த வெள்ளை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில். ”நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதை பாதுகாப்பாகவும், ஞானத்துடனும் கையாள வேண்டும்.
ஆண்டிற்கு ஒரு கோடி வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். ஆனால, 2016ம் ஆண்டில் 1.5 லட்சம் வேலைவாய்ப்புகள் ம்டடுமே உருவாக்கப்பட்டது என்று மத்திய தொழிலாளர் நலத் துறையே ஒப்புக் கொண்டுள்ளது. 11 லட்சம் வேலைவாய்ப்புக்கள் 2011ம் ஆண்டிலும், 4.2 லட்சம் வேலைவாய்ப்புகள் 2014ம் ஆண்டிலும் உருவாக்கப்பட்டது” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ”தற்போதைய அரசு கொடூரமான சித்திரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு உதாரணம் சில.500 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளுக்கு மோடி கையெழுத்திட்டுள்ளார். இது நாட்டின் மொத்த உற்பத்தியை 20 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துவிடும் என்று கூறப்பட்டது. ஆனால்,நேரடி வெளிநாட்டு முதலீடு மற்றும் தனியார் முதலீடு ஆகிய இரண்டும் தோல்வியடைந்துள்ளது” என் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Related Post

அந்த அறிக்கையில், ”மத்திய புள்ளியல் துறை தகவல்களின் அடிப்படையில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் நாட்டின் பொருளாதாரம் தற்போது மொத்த வைப்பு மூலதனத்தில் சுருங்கி காட்சியளிக்கிறது. நாட்டின் பொதுத் துறைகளின் நிகர நிலையான சொத்துக்கள் மற்றும் அவர்களின் சம்பள பட்டியல் கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு ”நாட்டில் விவசாய உற்பத்தி சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் கோதுமை உற்பத்தி அதிகரித்திருப்பதாக மூடி மறைக்கும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கோதுமை இறக்குமதிக்கான 25 சதவீத வரியை முற்றிலும் ரத்து செய்து 2 முதல் 3 மில்லியன் டன் கோதுமையை இறக்குமதி செய்துவிட்டு, உற்பத்தி செய்ததாக மத்திய அரசு கணக்கு காட்ட முயற்சிக்கிறது. பணமதிப்பிழப்பு அறிவிப்பு கிராமப் புறத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நூறு நாள வேலை திட்டத்தை செயல்படுத்த கூட போதுமான நிதி இல்லை. இந்த திட்டத்தில் 2015&16ம் நிதியாண்டில் முதல் 50 நாட்களில் 2.27 கோடி பேர் வேலை கேட்டும், 1.1 கோடி பேருக்கு மட்டுமே வேலை அளிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

”இந்த அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. அதே சமயம் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோர் தோற்றுப்போன பொருளாதார மேதைகள் என்பதை காட்டுகிறது” என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு விமர்சனம் செய்துள்ளார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago