இதுவரை தங்கள் ஆதார் அட்டை பயன்படுத்தாத மக்களுக்கு கூட அவர்களின் தரவு பயோமெட்ரிக் அங்கீகாரம் வழியாக அணுகப்பட்டது என்று கூறி இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் (UIDAI) இருந்து மின்னஞ்சல் கிடைத்துள்ளது. இது வெளிப்படையாக மிகவும் ஆபத்தான ஒன்றாக உள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணைய சேவையகங்களில் சேமிக்கப்படும் உங்கள் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்தால் இதுபோன்ற அனைத்து விடயங்களையும் நீங்கள் தவிர்க்க முடியும். அதாவது இந்த பயோமெட்ரிக் தரவுகளை வேறொருவரால் அணுக முடியாது, உங்களுக்கு தேவையான நேரத்தில் அன்லாக் செய்து அணுகல் முடிந்த பின்னர் மீண்டும் லாக் செய்து விடலாம் என்று அர்த்தம்.
சரி உங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவுகளை ஆன்லைனில் லாக் செய்வது எப்படி என்பதை பின்வரும் எளிமையான வழிமுறைகளை கொண்டு தெரிந்துக்கொள்ளவும். வழிமுறை #01 : இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் வலைத்தளத்திற்குள் நுழைய வேண்டும் – அதனுள் நுழைய இங்கே கிளிக் செய்யவும்.
அங்கு உங்கள் 12 இலக்க ஐக்கிய ஆதார் எண்ணை பதிவிடவும். பின்னர் உங்கள் ஆதார் எண் பதிவிடும் இடத்திற்கு கீழே வலைத்தளத்தில் காட்டப்படும் பாதுகாப்பு குறியீட்டை கேட்கப்படும் இடத்தில நுழைக்கவும். பின்னர் ஒடிபி எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்ட் கேட்டு ஜெனரேட் ஒடிபி கிளிக் செய்யவும்.
உங்களுக்கான ஒருமுறை கடவுச்சொல் நீங்கள் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் வழியாக அனுப்பப்படும். அதை வலைதள பக்கத்தில் உள்ளிடவும். பின்னர் ‘வெரிப்பை’ பட்டனை கிளிக் செய்யவும்.
இப்போது எனேபிள் பயோமெட்ரிக் லாக்கிங் என்பதை சோதிக்கவும், பின்னர் பயோமெட்ரிக் லாக்கிங்கை எனேபிள் செய்யவும், அவ்வளவுதான். ஒருவேளை நீங்கள் உங்கள் லாக்கை அன்லாக் செய்ய வேண்டுமென்றால் எனேபிள் பயோமெட்ரிக் லாக்கிங்கை அன்செக் செய்து பின்னர் டிடிசேபிள் கிளிக் செய்யவும்.
பயோமெட்ரிக் தரவுகளை லாக் செய்கிறீர்கள் என்றால் நீங்கள் ஆதார் பரிமாற்றங்களை உங்கள் கை அல்லது கருவிழி ஸ்கேன் மூலம் நிகழ்த்ததாமல், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் ஒடிபி வழியாக மட்டுமே தகவல்கள் சார்ந்த கோரிக்கைகளை அங்கீகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸை ஆன்லைன் பார்ப்பது எப்படி என்பது பற்றிய டூடோரியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.!
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…