தேனி
தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆன்மீகத்தலமான சுருளி அருவி பகுதிக்கு ஆடிஅமாவாசை நாளில் செல்ல ராயப்பன்பட்டி போலீசார் தடைவிதித்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி மற்றும் புகழ்பெற்ற சுருளி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக தேனி மாவட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருவது வழக்கம். தற்போது கொரோனா 3ஆம் அலை பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், வனத்துறை அதிகாரிகள் சுருளி அருவிக்கு செல்லும் சாலையை அடைத்தனர்.
இந்த நிலையில், ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் மற்றும் ஆடி வெள்ளிக் கிழமைகளில் பொதுமக்கள் அதிகளவு கூடாமல் இருப்பதற்காக மாவட்ட நிர்வாகம் 3 நாட்கள் பொதுமக்கள் நீர்நிலைகளில் வழிபாடு நடத்த தடை விதித்து உள்ளது.
இதன் காரணமாக இன்று சுருளி அருவி மற்றும் ஆற்றங்கரை வரை செல்ல ராயப்பன்பட்டி போலீசார் தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதனையொட்டி, க.விலக்கு, பழைய சுருளி அருவி சாலை உள்ளிட்ட பகுதிகளை சீல் வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அருவிக்கு வரும் பக்தர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் அங்கு செல்லும் பெரியாற்றில் வழிபாடு நடத் திவிட்டு புறப்பட்டு சென்றனர்.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…