இந்திய பயணிகளுக்கு விதித்த பயண கட்டுப்பாடுகளை திரும்பபெற்ற பிரிட்டன்

கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பிரிட்டனில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திரும்பபெறப்பட்டுள்ளன. பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டபோதிலும் 10 நாள்களுக்கு விடுதியில் தங்கி தனிமைப்படுத்தி கொள்ள வேண்டியிருந்தது.

பிரிட்டனில் அமலில் இருந்த இந்த கட்டுப்பாடு இன்றுடன் திரும்பபெறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கட்டுப்பாடுகள் அதிகமுள்ள சிவப்பு பட்டியலிருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் சுகாதாரம் மற்றும் சமூகநலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவிலிருந்து பிரிட்டன் வரும் தடுப்பூசி செலுத்தி கொண்ட பயணிகள் அனைவரும் தங்களது வீட்டிலோ அல்லது அனுமதிக்கப்பட்ட இடங்களிலோ தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்ன?

Related Post

அதேபோல், அரசு அனுமதித்த இடங்களில் 10 நாள்கள் தனிமைப்படுத்தி கொள்ள கூடுதலாக 1,750 பவுண்டுகள் கட்டணமாக செலுத்த வேண்டியிருந்தது. இனி, அதை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அல்லது ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டும் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுளளது.

உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவருகிறது. அதில், பிரிட்டனில் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளை தவிர்த்து வேறு என்ன தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு எல்லாம் விலக்கு அளிக்கலாம் என்பது குறித்து பிரிட்டன் சுகாதாரத்துறை ஆலோசனை மேற்கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.

ஆக்ஸ்போர்டு/ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தி கொண்டவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
Tags: dinamani

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago