கட்டுப்படுத்த முடியாத காட்டுத்தீயால் ஏதென்ஸை விட்டு வெளியேறும் மக்கள்

கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயானது தலைநகர் ஏதென்ஸை நெருங்கி வருவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

கிரீஸ் நாட்டில் வரலாறு காணாத வெப்ப அலை நிலவி வருவதால் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. தலைநகர் ஏதென்ஸ்க்கு வடக்கே தீ பரவி வருவதால் அப்பகுதியை கரும்புகை சூழ்ந்துள்ளது.

இதையும் படிக்க | அச்சம் தரும் காலநிலை மாற்றம்: அழியப்போகிறதா உலகம்?

காட்டுத்தீ பரவல் வேகமாகி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏதென்ஸ் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

நாட்டின் பேரிடர் மீட்புத்துறை மற்றும் ராணுவத்தினர் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் வானிலிருந்து தண்ணீரை இறைஞ்சி தீயை அணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

Related Post

காடுகளில் உள்ள வன விலங்குகள் இரண்டாவது வாரமாக எரிந்துவரும் தீயில் சிக்கி பலியாகி வருவது அதிகரித்து வருகிறது. வெப்ப அலைகளின் காரணமாக தெற்கு ஐரோப்பாவின் துருக்கி, அல்பேனியா நாடுகளிலும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கட்டுக்கடங்காத காட்டுத்தீ: கலிபோர்னியாவில் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

காட்டுத்தீ காரணமாக வடக்கு மாசிடோனியாவில் அடுத்த 30 நாள்களுக்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கான ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் வர்ஜினிஜஸ் சின்கெவிசியஸ், தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பாதிப்பானது காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய எச்சரிக்கையாகும் எனத் தெரிவித்துள்ளார்.

Share
Tags: dinamani

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago