Zomato IPO: வருகிறது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஐ.பி.ஓ; ஒரு பங்கின் விலை எவ்வளவு தெரியுமா?

இந்த ஐ.பி.ஓ மூலம் ரூ.8,250 கோடியைத் திரட்ட ஏற்கெனவே முடிவு செய்திருந்த நிலையில், தற்போது அதன் மதிப்பை அதிகரித்து, மொத்தம் ரூ.9,375 கோடியை முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகிறது. அதன்படி, இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் ரூ.9,000 கோடி மதிப்பிலான புதிய பங்குகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது.

Zomato IPO: பங்கு வெளியீடு மூலம் ரூ.8,250 கோடி திரட்டும் ஸொமேட்டோ; அடுத்த இலக்குகள் என்ன?

மேலும், தனது விற்பனை பார்ட்னரான இன்ஃபோ எட்ஜ் நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலம் மீதமுள்ள ரூ.375 கோடியைத் திரட்ட முடிவு செய்திருக்கிறது.

இந்த ஐ.பி.ஓ-வில் ரூ.65 லட்சம் பங்குகள் ஸொமேட்டோ நிறுவனத்தின் ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஐ.பி.ஓ-வில் வெளியிடப்பட்டும் பங்கு ஒன்றின் விலைப்பட்டை ரூ.72-76 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 195 பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக, இதன் மடங்கில் எவ்வளவு வேண்டுமானாலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களின் பிரிவுக்கு 75%, 10% ரீடெய்ல் முதலீட்டாளர்களுக்கு, 15% நிறுவனமல்லாத முதலீட்டாளர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Post

ஐ.பி.ஓ வெளியீட்டிற்குப் பிறகு, ஜூலை 26-ம் தேதியிலிருந்து ஸொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டை கோட்டக் மஹிந்திரா கேப்பிட்டல், மார்கன் ஸ்டேன்லி இந்தியா மற்றும் கிரெடிட் சூசே செக்யூரிட்டீஸ் (இந்தியா) ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன.

மிகப்பெரியஐ.பி.ஓ!

கடந்த 2020-ம் ஆண்டில் எஸ்.பி.ஐ கார்டு ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் ரூ.10,355 கோடியை முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டியது. அதன்பிறகு இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டும் ரீதியில் எந்தவொரு ஐ.பி.ஓ-வும் வெளியாகவில்லை. கொரோனாவின் பிடியில் இருந்து இந்தியப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவருகிறது. இந்தியப் பங்குச் சந்தைகளின் செயல்பாடுகளும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை தந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ரூ.9,375 நிதியைத் திரட்டும் நோக்கில் வெளியாகும் மிகப் பெரிய ஐ.பி.ஓ இது என்பதால், முதலீட்டாளர்களிடம் இந்த ஐ.பி.ஓ-வுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
Tags: vikatan

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago