இ- பதிவு செய்வது எப்படி? என்னென்ன ஆவணங்கள் வேண்டும்? முழு விவரம் – இன்று அமலுக்கு வருகிறது !

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையில் அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் மேற்கொள்ள இ பதிவு அவசியம் என்ற புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை (https://eregister.tnega.org) இணையதளத்தில் இ-பதிவு செய்து, இ-பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-பதிவு விண்ணப்பிப்பது எவ்வாறு:
https://eregister.tnega.org என்ற இணையதளத்தின் வாயிலான இ – பதிவு செய்துக்கொள்ளலாம்.

இந்த இணையதளத்தில் உள்நுழைந்தவுடன், இதில் நீங்களே எங்கே பயணம் செய்கிறீர்கள்? என ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும். அதிலும் இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும்

1. வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருபவர்கள்

2. மற்றவர்கள்( மாவட்டத்திற்குள், மாவட்டங்களுக்கு நடுவில் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் தனிநபர்கள் மேற்கொள்ளும் பயணப் பதிவுகள்)

மாவட்டத்திற்குள், மாவட்டங்களுக்கு இடையேயான பயணம் என்றால் இரண்டாது ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

இ- பதிவுக்கு உள்நுழைவதற்கு உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களை சரியாக பதிவிடவும். பின்னர் உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதனை பதிவு செய்தவுடன். இ- பதிவு பக்கத்துக்கு செல்லும்.

இ-பதிவு பக்கம் 

அங்கு இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும்

1 தனி நபர்/ குழு சாலை வழி பயணம்

Related Post

2 தனி நபர்/ குழு ரயில்/ விமானம் வழி தமிழ்நாட்டின் உள் நுழைத்தல் .. நீங்கள் உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்துக்கொள்ளலாம்

இதில் தனி நபர்/ குழு சாலை வழி பயணம் என்றால்

1. பைக்கில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்..
2. கார்களில் 3 பேர் மட்டும் செல்ல அனுமதி
3. இறப்பு, திருமணம், முதியோர் பராமரிப்பு, மருத்துவ அவசரம் ஆகிய காரணங்கள் தவிர வேறு எதற்கும் அனுமதி கிடையாது
4. செல்பேசி எண், ஆதார் / பான் / ஏதேனும் அடையாளம் வழங்க வேண்டும்.
5. காரணத்திற்கான ஆவணத்தையும் சமர்பிக்க வேண்டும்.

காரணம்

  1. இறப்பு,
  2. திருமணம்,
  3. முதியோர் பராமரிப்பு,
  4. மருத்துவ அவசரம்
    இந்த நான்கு காரணங்களுக்கு மட்டுமே அனுமதி இவற்றில் உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பயணம் எங்கு வரை

  • மாவட்டங்களுக்குள்
  • மாவட்டங்களுக்கிடையே
  • வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் நுழைவது.

இவற்றில் உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுக்க வேண்டும்

பயணத் தேதி, பயணக்காரணத்திற்கான ஆவணம் சமர்பிக்க வேண்டும். அந்த ஆவணமானது 1MB க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் அடையாள சான்று

ஆதார் கார்டு,
பான் கார்டு,
ஓட்டுநர் உரிமம்
குடும்ப அட்டை ( ரேஷன் கார்டு)
பாஸ்போர்ட்
இவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்பிக்க வேண்டும்

இந்த அடையாளச் சான்றுகளில் இருக்கும் எண்ணை பதிவு செய்யவேண்டும்

விண்ணப்பதாரருடன் சேர்த்து மொத்தம் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள், எந்த வாகனத்தில் பயணம் மேற்கொள்ளவுள்ளனர், வாகன எண் ஆகியவற்றை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் சமர்பித்த ஆவணங்கள் சரியான இருந்தால் உங்களது இ-பதிவு வெற்றிகரமான முடிவடையும். நீங்கள் இந்த ஊரடங்கு காலத்தில் தடையின்றி உங்களை பயணத்தை தொடரலாம்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago