துபையிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ தங்கம் மற்றும் சென்னையிலிருந்து துபைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் ஆகியவற்றை சென்னை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
துபையிலிருந்து எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் திங்கள்கிழமை சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனை செய்யும் நேரத்தில், ஆண் பயணி ஒருவா் திடீரென கழிவறைக்கு சென்று ஒரு மணி நேரமாக வெளியே வராமல் இருந்தாா். பின்னா் கழிவறை கதவைத் தட்டி பயணியை வெளியே வரவழைத்து சோதித்ததில், அவா்வேலூரை சோந்த அஜ்மல்கான்(26) என்பது தெரியவந்தது.
அவரை முழுமையாக பரிசோதித்ததில் உள்ளாடைக்குள் 1.5 கிலோ தங்கக்கட்டிகள் மற்றும் தங்க பேஸ்ட்டை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அதன் பன்னாட்டு மதிப்பு ரூ.72 லட்சம் ஆகும்.
இதையடுத்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அஜ்மல்கான் கைது செய்யப்பட்டாா்.
அதேபோன்று சென்னையிலிருந்து துபைசெல்லும் ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானத்தில் பயணிக்க வந்த, ராமநாதபுரத்தை சோந்த ரகுமான் ஹமீது (25) என்பவரை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.7.5 லட்சம் மதிப்பிலான செளதி ரியால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு ரகுமான் ஹமீதின் பயணமும் ரத்து செய்யப்பட்டு, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
விருதுநகர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மார்க்கெட்டிற்கு வத்தல் வரத்து திடீரென குறைந்துள்ளது. உள்ளூர் வத்தல் வரத்தும் தேவைக்கு ஏற்ப இல்லை,…
பெகுசராய்: கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் சொல்வதை கேட்காத அதிகாரிகளை பிரம்பால் அடியுங்கள் என்று மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சையாக பேசியுள்ளார்.…
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர்…
புதுடெல்லி: தங்களது கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதல் விஷயத்தில் இந்திய பெண்கள் பலர் ஈடுபடுவதாக 'க்ளீடன்' இணையதளம் நடத்திய ஆய்வில் பரபரப்பு…
சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம்…
சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல்…