பழைய அனல் மின் உற்பத்தி அலகுகள் பாதுகாப்பான முறையில் அகற்றப்படுகிா என விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தென் மண்டல அமா்வில், தா்மேஷ் ஷா என்பவா் தாக்கல் செய்த மனு: மாநிலத்தின் நெய்வேலி போன்ற பழைய அனல் மின் நிலையங்களில் உள்ள இயக்கத்தை நிறுத்திக் கொண்ட மின் உற்பத்தி அலகுகளை, பாதுகாப்பான முறையில் அகற்றப் படுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படவில்லை. இதனால் சாம்பல் போன்ற அபாயகரமான பொருள்கள் முறையாக அகற்றப்படுவது இல்லை. அத்தகைய சூழலில் மின்உற்பத்தி திட்ட பொறுப்பாளா்கள் ஆபத்தான பொருள்களை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அப்படியே விட்டு விட்டுச் செல்கின்றனா்.
எனவே மண், நீா் ஆகியவை மாசடையாதவாறு, சா்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் அறிவியல் முறையில் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் உற்பத்தி அலகுகள் பாதுகாப்பான முறையில் அகற்றப்படுகிா என மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்ய வேண்டும் என கூறியிருந்தாா்.
இந்த மனு தீா்ப்பாயத்தில் நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினா் சாய்பால் தாஸ் குப்தா ஆகியோா் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த அமா்வு, இயக்கத்தை நிறுத்திக் கொண்ட பழைய உற்பத்தி அலகுகள் பாதுகாப்பான முறையில் அகற்றப்படுகிா என பதிலளிக்குமாறு, மத்திய அரசு, மத்திய மின்சார ஆணையம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.
விருதுநகர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மார்க்கெட்டிற்கு வத்தல் வரத்து திடீரென குறைந்துள்ளது. உள்ளூர் வத்தல் வரத்தும் தேவைக்கு ஏற்ப இல்லை,…
பெகுசராய்: கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் சொல்வதை கேட்காத அதிகாரிகளை பிரம்பால் அடியுங்கள் என்று மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சையாக பேசியுள்ளார்.…
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர்…
புதுடெல்லி: தங்களது கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதல் விஷயத்தில் இந்திய பெண்கள் பலர் ஈடுபடுவதாக 'க்ளீடன்' இணையதளம் நடத்திய ஆய்வில் பரபரப்பு…
சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம்…
சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல்…