‘போலியோ’ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஒத்திவைப்பு

புதுடில்லி : கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கருத்தில் கொண்டு, வரும், 17ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த, ‘போலியோ’ சொட்டு மருந்து வழங்கும் முகாம், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.நாடு முழுதும், வரும், 17ம் தேதி, போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.அடையாளம்இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியிருந்ததாவது:தேசிய நோய் தடுப்பு தினமான, ஜனவரி, 17ம் தேதி, சொட்டு மருந்து வழங்கும் முகாம், துவங்கப்படும். இரண்டு அல்லது, மூன்று நாட்களுக்கு, நாடு முழுதும், இந்த முகாம் நடக்கும். தடுப்பு மருந்துகள் பெறாத குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறி இருந்தார்.இதற்கிடையே, ‘கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை, மக்களுக்கு செலுத்தும் பணிகள், நாளை மறுநாள் முதல் துவங்கப்படும்’ என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடிதம்இது தொடர்பாக, கடந்த, 9ம் தேதி, அனைத்து மாநில சுகாதாரத் துறை முதன்மை செயலர்களுக்கும், மத்திய சுகாதாரத் துறை, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘எதிர்பாராத நடவடிக்கைகள் காரணமாக, வரும், 17ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை ஒத்தி வைக்கப்படுகிறது’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post
Share

Recent Posts

ஜனவரி 24: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.88.29; டீசல் விலை ரூ.81.14

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.29 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.14 என்ற…

1 hour ago

மத்திய பட்ஜெட் 2021-22: அல்வா நிகழ்ச்சியுடன் தொடங்கியது இறுதிகட்ட பணிகள்

மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-க்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் அல்வா நிகழ்ச்சி இன்று மதியம் மத்திய…

1 hour ago

குறைந்தபட்ச ஆதரவு விலை; 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

2021 ஜனவரி 21 வரை 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.2020-21 காரீப் சந்தைக் காலத்தில் குறைந்தபட்ச…

1 hour ago

திறன்மிகு துறைமுகங்களாக மாற்ற தொழில்நுட்பங்கள்: மத்திய அரசு ஆலோசனை

மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் மூன்று நாள் ஆலோசனை கூட்டம் இன்று நிறைவுற்றது. மத்திய துறைமுகம், கப்பல்…

1 hour ago

வாடிக்கையாளருக்கு வங்கி தரும் எச்சரிக்கை!

அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் போன் செய்து உங்களது நம்பருக்கு ஒரு கோடி லக்கி பிரைஸ் விழுந்துள்ளது, உங்களுக்கு ஒரு…

1 hour ago

சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையா.? அப்ப இதை செய்யுங்கள்.. கண்டிப்பா கிடைக்கும்.!!

கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக எல்பிஜி…

1 hour ago