“ஆஸ்திரேலியா செல்வதற்கு தயார்” – வீரேந்திர சேவாக் கிண்டல்

புதுடெல்லி: இந்திய அணிக்கு தேவைப்பட்டால், ஆஸ்திரேலியா செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று கிண்டலாக பேசியுள்ளார் முன்னாள் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் வீரர்கள் பலர் தொடர்ச்சியாக காயமடைந்து, நாடு திரும்புவதும், போட்டியிலிருந்து விலகுவதுமாக இருக்கும் சூழலில், இவ்வாறு பேசியுள்ளார் சேவாக்.

இந்திய அணியில், விராத் கோலி நாடு திரும்பிவிட்ட சூழலில், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, உம‍ேஷ் யாதவ், அனுமன் விஹாரி, கேஎல் ராகுல் உள்ளிட்டவர்கள் காயம் காரணமாக விலகிவிட்டனர். கடைசி டெஸ்ட்டிலிருந்து ஜஸ்பிரிட் பும்ராவும் விலகுவதாக தகவல்கள் வருகின்றன.

இதனால், பிரிஸ்பேனில் நடைபெறும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நிலை என்னாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Post

தற்போது சேவாக் பேசியுள்ளதாவது, ‘இந்திய அணியில் களமிறங்க 11 வீரர்கள் இல்லாவிட்டால், நான் இந்திய அணிக்கு உதவுவதற்கு தயாராக இருக்கிறேன். இந்திய அணியில் இணையவும் தயார். ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படவும் சம்மதம். ஆனால், எனக்கு அங்கு தனிமைப்படுத்தும் விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்’ என்று கிண்டல் தொனிக்கப் பேசியுள்ளார்.

உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: நோவக் ஜோகோவிச் அரை இறுதிக்குள் நுழைந்தார் 2016 ஃபார்முலா 1: தந்தை போலவே ரோஸ்பெர்க் சாம்பியன் பட்டதை கைப்பற்றினார் 10 ஆயிரம் ரன்கள் இலக்கு: வாப்பை தவறவிட்ட கெய்ல்!

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை – 3 இடத்தில் விராத் கோலி! Next காயத்தால் தத்தளிக்கும் இந்திய அணி – பிரிஸ்பேன் டெஸ்ட்டில் இடம்பெறுவது யார் யார்?

Share

Recent Posts

ஜனவரி 24: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.88.29; டீசல் விலை ரூ.81.14

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.29 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.14 என்ற…

1 hour ago

மத்திய பட்ஜெட் 2021-22: அல்வா நிகழ்ச்சியுடன் தொடங்கியது இறுதிகட்ட பணிகள்

மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-க்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் அல்வா நிகழ்ச்சி இன்று மதியம் மத்திய…

1 hour ago

குறைந்தபட்ச ஆதரவு விலை; 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

2021 ஜனவரி 21 வரை 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.2020-21 காரீப் சந்தைக் காலத்தில் குறைந்தபட்ச…

1 hour ago

திறன்மிகு துறைமுகங்களாக மாற்ற தொழில்நுட்பங்கள்: மத்திய அரசு ஆலோசனை

மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் மூன்று நாள் ஆலோசனை கூட்டம் இன்று நிறைவுற்றது. மத்திய துறைமுகம், கப்பல்…

1 hour ago

வாடிக்கையாளருக்கு வங்கி தரும் எச்சரிக்கை!

அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் போன் செய்து உங்களது நம்பருக்கு ஒரு கோடி லக்கி பிரைஸ் விழுந்துள்ளது, உங்களுக்கு ஒரு…

1 hour ago

சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையா.? அப்ப இதை செய்யுங்கள்.. கண்டிப்பா கிடைக்கும்.!!

கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக எல்பிஜி…

1 hour ago