மனப்பூர்வ திருமணம் தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

அலகாபாத்: மனப்பூர்வ திருமணங்களுக்கு, சிறப்பு திருமணச் சட்டத்தின் பிரிவு 6ன் படி, நோட்டீஸ் வெளியிடுவதோ அல்லது பிரிவு 7ன் படி ஆட்சேபணைகளைப் பெறுவதோ கட்டாயமில்லை என்று தீர்ப்பளித்துள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

இத்தகைய விதிமுறையானது, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், குடிமக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப திருமண ஜோடிகளை தேர்வுசெய்து கொள்ளும் சுதந்திரத்தையும் இது பாதிக்கிறது என்றுள்ளார் நீதிபதி விவேக் செளத்ரி. இந்த தீர்ப்பு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக கருதப்படுகிறது.

திருமணச் சட்டம் 1954, பிரிவு 5ன்படி, நோட்டீஸ் வழங்குகையில், மனப்பூர்வ திருமணத்திற்கு, தரப்புகள், திருமண அதிகாரி நோட்டீஸை வெளியிட வேண்டும் அல்லது வெளியிடக் கூடாது என்று எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது.
இதை விருப்பமிருந்தால் பயன்படுத்தலாம்.

Related Post

இந்நிலையில், அவ்வாறு எழுத்துப்பூர்வ கோரிக்கை வராத பட்சத்தில், அச்சட்டத்தின் பிரிவு 6ன்படி, நோட்டீஸை வெளியிட்டு, ஆட்சேபணைகளைப் பெற வேண்டிய கட்டாயம், திருமண அதிகாரிக்கு இல்லை என்பதே தற்போதைய நீதிமன்ற தீர்ப்பு.

ஒலிம்பிக்ஸ்: இந்தியாவின் யோகேஸ்வர் தத் தோல்வி ரொமான்ஸ் என்ற பெயரில் ஈவ்டீசிங்: சினிமாக்காரர்களைத் தாக்கும் மேனகா காட்டம் ம.பி: ரூபாய் நோட்டு அச்சகத்தில் திருடிய அதிகாரி சிக்கினார்

பாஜக கூட்டணி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்: அரியானா காங்கிரஸ் தலைவர்

Share

Recent Posts

ஜனவரி 24: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.88.29; டீசல் விலை ரூ.81.14

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.29 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.14 என்ற…

38 mins ago

மத்திய பட்ஜெட் 2021-22: அல்வா நிகழ்ச்சியுடன் தொடங்கியது இறுதிகட்ட பணிகள்

மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-க்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் அல்வா நிகழ்ச்சி இன்று மதியம் மத்திய…

38 mins ago

குறைந்தபட்ச ஆதரவு விலை; 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

2021 ஜனவரி 21 வரை 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.2020-21 காரீப் சந்தைக் காலத்தில் குறைந்தபட்ச…

38 mins ago

திறன்மிகு துறைமுகங்களாக மாற்ற தொழில்நுட்பங்கள்: மத்திய அரசு ஆலோசனை

மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் மூன்று நாள் ஆலோசனை கூட்டம் இன்று நிறைவுற்றது. மத்திய துறைமுகம், கப்பல்…

38 mins ago

வாடிக்கையாளருக்கு வங்கி தரும் எச்சரிக்கை!

அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் போன் செய்து உங்களது நம்பருக்கு ஒரு கோடி லக்கி பிரைஸ் விழுந்துள்ளது, உங்களுக்கு ஒரு…

38 mins ago

சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையா.? அப்ப இதை செய்யுங்கள்.. கண்டிப்பா கிடைக்கும்.!!

கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக எல்பிஜி…

38 mins ago