ஆண்கள் அலுவலகம் செல்லும் போது கட்டாயம் எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்!

பெண்கள் மட்டும் தான் எப்போதும் பிரஷ்ஷாக காட்சியளிக்க வேண்டும் என்பதில்லை. ஆண்களும் அப்படி காட்சியளிக்கலாம். ஆனால் அதற்கு ஆண்கள் தங்கள் அழகின் மீது கவனத்தையும், அக்கறையையும் காட்ட வேண்டும். பொதுவாக பெண்கள் எங்கு சென்றாலும், தங்கள் ஹேண்ட்-பேக்கில் ஒரு மினி மேக்கப்-கிட் வைத்துக் கொண்டு சுற்றுவார்கள். இது தான் பெண்களை எப்போதும் பிரஷ்ஷாக காட்டுகிறது.

ஆனால் ஆண்களால் அப்படி எந்நேரமும் தங்கள் கையில் ஒரு பையை வைத்துக் கொண்டு சுற்ற முடியாவிட்டாலும், வீட்டை விட அதிகமாக நேரம் செலவழிக்கும் அலுவலகத்தில் தங்களுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள டெஸ்க் டிராயரில் ஒருசில அடிப்படை அழகு சாதனப் பொருட்களை வைத்துக் கொள்வது நல்லது.

MOST READ: வாயில் உள்ள பாக்டீரியாக்களை முழுமையாக நீக்க வேண்டுமா? அப்ப இத டெய்லி செய்யுங்க…

என்ன தான் அலுவலகத்தில் நாள் முழுவதும் ஏசியில் இருந்தாலும், நாளின் முடிவில் எண்ணெய் வழிந்த முகத்துடன் பொலிவிழந்து தான் நாம் காணப்படுகிறோம். இதனால் எந்த ஒரு முக்கிய இடங்கள் அல்லது விஷேசங்களுக்கு அலுவலகத்தில் இருந்து செல்ல முடியாமல், வீட்டிற்கு சென்று பிரஷ்-அப் செய்து கொண்டு, பின் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

MOST READ: 10 நிமிடத்தில் முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப இத செய்யுங்க…

இப்படியொரு நிலையைத் தவிர்க்க நினைத்தால், ஆண்கள் தங்கள் அலுவலகத்தில் ஒருசில அழகு சாதனப் பொருட்களை வைத்துக் கொள்வதே நல்லது. இப்போது ஆண்களை பிரஷ்ஷாக காட்ட உதவும் அந்த அடிப்படை அழகு சாதனப் பொருட்கள் எவையென்று காண்போம்.

அலுவலகத்திற்கு செல்லும் ஒவ்வொரு ஆண்களும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஒரு அழகு பராமரிப்பு பொருள் தான் ஃபேஷ் வாஷ். அதுவும் சருமத்திற்கு பொருத்தமான கெமிக்கல் அதிகம் இல்லாத மைல்டு கிளின்சரைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது சிறந்தது. அதிலும் இயற்கை உட்பொருட்கள் அடங்கிய ஃபேஷ் வாஷ் என்றால் சருமத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்.

ஆண்கள் அலுவலகம் செல்லும் போது கட்டாயம் எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்! பிபி க்ரீம்

Related Post

பொதுவாக பிபி க்ரீம் முகத்தில் உள்ள அசிங்கமான பிம்பிள் அல்லது பருக்களை மறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால் இந்த பொருள் அதற்கு மட்டுமின்றி, சமச்சீரற்ற சரும நிறம், வறண்டு அசிங்கமாக காணப்படும் சருமம் போன்றவற்றை மறைக்கவும் பெரிதும் உதவும். மேலும் தற்போது ஆண்களின் சருமத்திற்கு என்று பிரத்யேகமாக பிபி க்ரீம் தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது. அதை வாங்கிப் பயன்படுத்துவது இன்னும் நல்லது.

ஆண்கள் அலுவலகம் செல்லும் போது கட்டாயம் எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்! மாய்ஸ்சுரைசர்

தற்போது அடிக்கும் வெயிலுக்கு சருமத்திற்கு போதுமான நீர்ச்சத்து கிடைப்பதில்லை. என்ன தான் எண்ணெய் பசை சருமத்தினராக இருந்தாலும், சில சமயங்களில் சருமம் வறட்சியடைந்து காட்சியளிக்கிறது. எனவே உங்கள் சரும வகைக்கு ஏற்ப பிசுபிசுப்புடன் இல்லாத மாய்ஸ்சுரைசரைப் பார்த்து தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

ஆண்கள் அலுவலகம் செல்லும் போது கட்டாயம் எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்! லிப் பாம்

பெண்கள் மட்டும் தான் லிப் பாம் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. ஆண்களுக்கும் உதடுகளில் வறட்சி ஏற்படும். இப்படி வறட்சி ஏற்பட்டு அசிங்கமாக காட்சியளிக்கும் உதடுகளை அழகாக பராமரிக்க நினைத்தால், அடிக்கடி லிப் பாம் பயன்படுத்துவதே சிறந்த வழி.

ஆண்கள் அலுவலகம் செல்லும் போது கட்டாயம் எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்! பெர்ஃப்யூம்

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் பயங்கரமாக வியர்த்துக் கொட்ட ஆரம்பிக்கும். அதிகமாக வியர்வை வெளியேறுவதால், துர்நாற்றம் வீசும். ஒருவர் துர்நாற்றமிக்க உடலுடன் இருந்தால், எப்படி உடன் வேலைப்புரிபவர்கள் அருகில் வந்து பேசுவார்கள்? எனவே இம்மாதிரியான சூழ்நிலையைத் தவிர்க்க நினைத்தால், எப்போதும் அலுவலக டிராயரில் ஒரு பெர்ஃப்யூமை வைத்து பயன்படுத்துங்கள்.

source: boldsky.com

Share

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

5 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

5 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

5 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

5 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

5 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

5 hours ago