`மோடி, அமித் ஷா மீது கடுமையான விமர்சனம்!’ -நெல்லை கண்ணன் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக குடியுரிமைப் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஹைதர்அலி, எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் முபாரக் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பேச்சாளருமான நெல்லை கண்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன், குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கடுமையாகச் சாடினார்.
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பி-க்கள் வாக்களித்ததற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

`பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் கொலை செய்யத் தூண்டும் வகையில் நெல்லை கண்ணன் பேசியதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்’ என்று நெல்லை மாவட்ட பா.ஜ.க சார்பாக மாநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் மீது 504 (பொது அமைதியைக் குலைக்கும் வகையில் வேண்டுமென்றே செயல்படுவது), 505 (குற்றம் செய்யத் தூண்டுதல்), 505(2) (இரு சமூகங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. `அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்’ என பாரதிய ஜனதா கட்சியினர் நெல்லை கண்ணனின் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Post

அ.தி.மு.க-வினர் புகார்!

மேலப்பாளையத்தில் நடந்த எஸ்.டி.பி.ஐ மாநாட்டில் நெல்லை கண்ணன் பேசும்போது, அ.தி.மு.க-வையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும் அவதூறாகப் பேசினார். 11 எம்.எல்.ஏ-களுடன் தனியாகப் பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வத்தையும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த 11 அ.தி.மு.க எம்.பி-க்களையும் ஒப்பிட்டு விமர்சித்தார்.

இதையடுத்து, முதல்வர், துணை முதல்வரை அவதூறாகப் பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என நெல்லை மாநகர அ.தி.மு.க சார்பாக பாளையங்கோட்டை பகுதிச் செயலாளர் வழக்கறிஞர் ஜெனி தலைமையில் அக்கட்சியினர் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக நெல்லை கண்ணனின் கருத்தை அறிய, அவரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஆனால், அவரது எண் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே உள்ளது. அவர் விளக்கம் தரும்பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்!

Share
Tags: vikatan

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago