முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன எழுதித் தந்ததையே கூறினோம்…திடுக் வாக்குமூலம்

இலங்கை: முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன கோரியதற்கிணங்கவே வெள்ளை வான் கடத்தல்கள் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியதாக, கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் வாக்குமூலம் அளித்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், ராஜித சேனாரட்ன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வெள்ளை வான் சாரதி மற்றும் சாட்சி என்று கூறப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபர்கள் இருவரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இதுதொடர்பாக நேற்று (பதன்கிழமை) கொழும்பு பிரதம நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

மேலும் ராஜித சேனாரட்ன கோரியதற்கிணங்கவே விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயம் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பொய்யான தகவல்களை அளித்ததாக சந்தேக நபர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற 3 மில்லியன் ரூபாயை தாங்கள் கோரியதாகவும் அமெரிக்கா அல்லது இங்கிலாந்து தூதரகத்தில் வேலையும் இரண்டு வீடுகளும் வழங்க ராஜித சேனாரட்ன ஒப்புக்கொண்டதை அடுத்து, 2 மில்லியன் ரூபாயாக அதனை குறைக்க இணங்கியதாகவும் சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ராஜித சேனாரட்ன எழுதிக் கொடுத்ததையே தாங்கள் கூறியதாகவும் அங்கு கூறியதில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் எனவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share
Tags: vivegam

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago