பொருளாதார மந்தநிலையிலும் முதலிடம் பிடித்த ஹூண்டாய்… மாருதி, ஹோண்டாவுக்கு சரிவு!

கார் உற்பத்தி நிறுவனங்களில் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையில் ஹூண்டாய் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. கார் உற்பத்தி நிறுவனங்கள் பலவும் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வருகின்றன. இத்தகைய சூழலிலும் ஆகஸ்ட் மாத விற்பனையில் ஹூண்டாய் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த போதும் மாருதி சுசூகியின் சியஸ், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ரேபிட், VW வென்டோ, டொயோடா யாரிஸ் ஆகிய கார்கள் சரிவைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாத விற்பனை எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் மாருதி சியஸ் மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய கார்களை இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களுக்குத் தள்ளிவிட்டு ஹூண்டாய் வெர்னா முதலிடத்தில் உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஹூண்டாய் 1,591 வெர்னா கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த டாப் 3 கார்களுக்கு அடுத்தபடியாக ஸ்கோடா புதிதாக இணைந்துள்ளது. ஆகஸ்ட் மாத விற்பனையில் ஹூண்டாய்க்கு முதலிடம் கிடைத்தாலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 52 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.மாருதி சுசூகி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 77 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மூன்றாம் இடத்தில் உள்ள ஹோண்டா 43 சதவிகித வீழ்ச்சி அடைந்துள்ளது. ஹூண்டாய் வெர்னா தற்போது இந்தியாவில் நான்கு என்ஜின் ரகங்களில் 8.08 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.மேலும் பார்க்க: ₹4 லட்சம் வரையில் ஆஃபர்…இந்திய ஹோண்டா கார்களுக்கு சிறப்புத் தள்ளுபடி ஆகஸ்ட் மாத கார்களின் விற்பனை பன்மடங்கு சரிவு

Related Post
Share

Recent Posts

ஜனவரி 24: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.88.29; டீசல் விலை ரூ.81.14

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.29 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.14 என்ற…

2 hours ago

மத்திய பட்ஜெட் 2021-22: அல்வா நிகழ்ச்சியுடன் தொடங்கியது இறுதிகட்ட பணிகள்

மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-க்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் அல்வா நிகழ்ச்சி இன்று மதியம் மத்திய…

2 hours ago

குறைந்தபட்ச ஆதரவு விலை; 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

2021 ஜனவரி 21 வரை 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.2020-21 காரீப் சந்தைக் காலத்தில் குறைந்தபட்ச…

2 hours ago

திறன்மிகு துறைமுகங்களாக மாற்ற தொழில்நுட்பங்கள்: மத்திய அரசு ஆலோசனை

மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் மூன்று நாள் ஆலோசனை கூட்டம் இன்று நிறைவுற்றது. மத்திய துறைமுகம், கப்பல்…

2 hours ago

வாடிக்கையாளருக்கு வங்கி தரும் எச்சரிக்கை!

அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் போன் செய்து உங்களது நம்பருக்கு ஒரு கோடி லக்கி பிரைஸ் விழுந்துள்ளது, உங்களுக்கு ஒரு…

2 hours ago

சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையா.? அப்ப இதை செய்யுங்கள்.. கண்டிப்பா கிடைக்கும்.!!

கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக எல்பிஜி…

2 hours ago