Categories
தலைப்புச்செய்திகள்

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் மண்சரிவு… 11 குடும்பங்கள் வெளியேறின

இலங்கை: நோர்வூட் நிவ்வெளிகம எனும் பகுதியில் நேற்று மாலை மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து 59 பேர் வெளியேற்றப்பட்டனர்.

மண்சரிவால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் 11 குடும்பத்தைச் சேர்ந்த 59 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நிவ்வெளிகம தோட்ட பங்களா பிரிவில், 9 ஆம் இலக்க லயன் குடியிருப்பு பகுதியிலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவினால் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதன்காரணமாக இக்குடியிருப்பில் வசித்து வந்த 59 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் நிவ்வெளிகம தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மலையகத்தில் தொடரும் மழை காரணமாக இப்பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சத்தினால், பொலிஸாரின் பாதுகாப்பும் தற்போது அங்கு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் தங்குமிட வசதிகளை நோர்வூட் பிரதே சபையின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply