Categories
Featured தலைப்புச்செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாக வாய்ப்பு உள்ளதாக அரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 5:30 மணி நிலவரப்படிசென்னையில் பெய்த மழையின் அளவானது, அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 39.1 மில்லி மீட்டர் மழையும் மீனம்பாக்கத்தில் 25.1 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க… கடல் சீற்றம் – மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Leave a Reply