Categories
Featured தலைப்புச்செய்திகள்

திண்டுக்கலில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்!

திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல் அருகே உள்ள முள்ளிபாடி புனித வள்ளார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளை இன்று காலை ஏற்றி வந்த வேன் மோளபாடியூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஓட்டுநர் சாலை ஓரமாக சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்துள்ளனர்.

சிகிச்சைக்கு பின் விபத்தில் சிக்கிய மாணவி

இதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் காயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திண்டுகல்லில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க… ஜவுளிக்கடைக்குள் புகுந்து உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Leave a Reply