சிறந்த வீரர்-சிறந்த டெஸ்ட் வீரர்: அஸ்வினுக்கு இரட்டை விருது

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்த ஆண்டுக்கான விருதுக்கு 2015-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி முதல் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில் வீரர்களின் செயல்பாடு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்படி இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான ‘சர் கேர்பீல்டு சோபர்ஸ்’ விருதுக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஐ.சி.சி.யின் மிக உயரிய விருதான இதை பெறும் 12-வது வீரர், இந்திய அளவில் 3-வது வீரர் ஆகிய சிறப்புகளை அஸ்வின் பெறுகிறார்.

Related Post

விருதுக்குரிய காலக்கட்டத்தில் அஸ்வின் 8 டெஸ்டில் விளையாடி 48 விக்கெட்டுகளும், 2 சதம் உள்பட 336 ரன்களும் எடுத்து ஆல்-ரவுண்டராக ஜொலித்தார்.
19 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 27 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இது தவிர, 2015-ம் ஆண்டின் இறுதியில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பெற்றதுடன், தற்போதும் டெஸ்டில் ‘நம்பர் ஒன்’ பவுலராக வலம் வருகிறார்.

அத்துடன் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதையும் அஸ்வின் தட்டிச் சென்றுள்ளார். இதன் மூலம் ஒரே ஆண்டில் இரட்டை விருதை உச்சிமுகரும் 2-வது இந்தியர் (இதற்கு முன்பு 2004-ம் ஆண்டில் டிராவிட் பெற்றிருந்தார்) என்ற மகிமையும் அஸ்வினுக்கு கிடைத்துள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago