துபாய்: இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த டெஸ்ட் வீரர் விருதையும் அவர் பெறுகிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வின் பந்து வீச்சாளர்கள் பட்டியலிலும், ஆல் ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலிலும் ஏற்கனவே முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர் 28 விக்கெட்டுகளையும் 4 அரைச்சதங்களையும் எடுத்திருந்தார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2016 ஆம் வருடத்துக்கான சிறந்த வீரராகவும் , சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் அஸ்வினை தேர்வு செய்துள்ளது.
இதன்மூலம் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபில்ட் சோபர்ஸ் கோப்பையை அஸ்வின் பெறுகிறார்.
இந்த விருது தேர்வுக்கான காலத்தல் அஸ்வின் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி48 விக்கெட்டுகள் மற்றும் 336 ரன்களை குவித்துள்ளார். மேலும் 19, 20 ஓவர் போட்டிகளில் விளையாடி அவர் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதைப் பெறும் மூன்றாவது இந்திய வீரர் அஸ்வின் ஆவர். இதற்கு முன்னர் 2010ஆம் வருடம் சச்சின் டெண்டுல்கரும், 2001 ஆம் ஆண்டில் ராகுல் டிராவிட்டும் விருதுகளை வென்றுள்ளனர்.
அஸ்வின் ஒரே வருடத்தில் இந்த இரண்டு விருதுகளையும் பெறும் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ராகுல் டிராவிட் 2004இல் 2 விருதுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
source: tamil.oneindia.com
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…