ராம்மோகன் வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், வீட்டில் உள்ள அறையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காலை முதல் ரெய்டு: தமிழக தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் இல்லத்தில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடைபெறுகிறது. ராம்மோகன் ராவ் மகன் வீடு, சித்தூர், பெங்களூரு என 13 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. ராம்மோகன் ராவ் வீடு மற்றும் தலைமை செயலகத்திலும் மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், அண்ணா நகரில் உள்ள ராம்மோகன் ராவ் வீட்டில் நடந்த சோதனையில் கீழ் தளத்தில் உள்ள அறையில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்களை ஆய்வுக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்டு செல்ல உள்ளனர். அவரது இல்லத்தில் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago