Mi Fan பெஸ்டிவல் 2 நாட்களுக்கு விசேஷமாக இருக்கும், Xiaomi சாதனங்களில் சிறப்பு சலுகைகளை Mi Fan விழா வழங்குகிறது

சியோமி நிறுவனம் இந்தியாவில் Mi ஃபேன் ஃபெஸ்டிவல் அறிவித்துள்ளது. நேற்று (ஏப்ரல்-2) துவங்கிய சிறப்பு விற்பனையில் சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்சம் ரூ.3000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இத்துடன் ஏப்ரல் 5 மற்றும் ஏப்ரல் 6-ம் தேதி விற்பனை நடைபெற இருக்கிறது. இந்த விற்பனையில் சியோமி நிறுவன உதிரி பாகங்கள், ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது.

சியோமி சாதனங்களின் புதிய விலை

சியோமி Mi மிக்ஸ் 2 ரூ.29,999 (ரூ.3000 தள்ளுபடி) சியோமி Mi மேக்ஸ் ரூ.12999 (ரூ.1000 தள்ளுபடி) சியோமி ரெட்மி 4 (64 ஜிபி) ரூ.9999 (ரூ.500 தள்ளுபடி) Mi பேன்ட் HRX எடிஷன் ரூ.999 (ரூ.300 தள்ளுபடி) Mi இன்-இயர் ஹெட்போன் ப்ரோ HD ரூ.1,699 (ரூ.300 தள்ளுபடி) Mi ஹெட்போன் கம்ஃபர்ட் ரூ.2,699 (ரூ.300 தள்ளுபடி) Mi விஆர் பிளே 2 ரூ.999 (ரூ.300 தள்ளுபடி) Mi பிஸ்னஸ் பேக்பேக் ரூ.999 (ரூ.300 தள்ளுபடி) Mi கார் சார்ஜர் ரூ.499 (ரூ.200 தள்ளுபடி) Mi ஏர் பியூரிஃபையர் ஃபில்ட்டர் ரூ.1,999 (ரூ.500 தள்ளுபடி)

ஏப்ரல் 5-ம் தேதி ஃபிளாஷ் விற்பனை காம்போக்கள்

Related Post

ரெட்மி 5A + Mi எல்இடி ஸ்மார்ட் டிவி 4A 32 இன்ச் ரூ.5999 Mi பேன்ட் HRX எடிஷன் + Mi பேன்ட் ஸ்டிராப் – HRX எடிஷன் ரூ.199 Mi ப்ளூடூத் ஸ்பீக்கர் 2 + Mi இயர்போன் பேசிக் ரூ.399 ரெட்மி Y1 லைட் + ரெட்மி Y1 லைட் சாஃப்ட் கேஸ் ரூ.249 Mi பேன்ட் 2 + Mi பாடி கம்போசிஷன் ஸ்கேல் ரூ.1,799 Mi ஏர் பியூரிஃபையர் 2 + Mi ஏர் பியூரிஃபையர் ஃபில்ட்டர் ரூ.2499

இத்துடன் மோர் லைக், மோர் டிஸ்கவுன்ட்ஸ் சலுகையில் குறிப்பிட்ட சாதனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட லைக் வழங்கப்படும் பட்சத்தில் அறிவிக்கப்பட்ட தொகை சாதனத்தின் விலையில் இருந்து குறைக்கப்படும்.
எனினும் இது குறைந்த எண்ணிக்கையிலான சாதனங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. கலர் அவர் பிளானட்ஸ் விளையாட்டில் வாடிக்கைாயளர்கள் அதிக கூப்பன்களை வெல்ல முடியும்.

ஷேர் அன்ட் இயர்ன் சலுகையில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட குழுவுடன் இணைந்து பகிர்ந்து கொள்ள முடியும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களது நண்பர்களை வரவேற்று குழு ஒன்றை உருவாக்க முடியும். மூன்று பேர் இணைந்து ஒரு குழு உருவானால் போதுமானது. இவ்வாறு குழு உருவானதும் சியோமி வழங்கும் ரூ.300 மதிப்பிலான கூப்பன்களை பெற முடியும். குழுவினை உருவாக்கியவருக்கு ரூ.200 மதிப்பிலான கூப்பனும், மற்ற இருவருக்கும் ரூ.50 மதிப்புடைய கூப்பன்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒரு குழுவினை ஒருமுறை மட்டுமே உருவாக்க முடியும்.

ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான ஃபிளாஷ் விற்பனை ஏப்ரல் 6 அதிகாலை 00:00 (AM) துவங்குகிறது. இதில் வாடிக்கையாளர்கள் ரூ.699 மதிப்புடைய Mi இயர்போன்களை இலவசமாக வெல்ல முடியும். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. சியோமி அறிவித்து இருக்கும் அனைத்து சலுகைகளையும் சியோமி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிந்து கொள்ள முடியும்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago