ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி UI 2.0 அப்டேட் கிடைக்கத் துவங்கியுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது. இப்போது ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கத் துவங்கியுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட். மேலும் இந்த ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி மாடலின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080×2,400 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்..

இந்த ரியல்மி நார்சோ 30 ப்ரோ மாடலில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 800U SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்க இந்த சாதனத்தை அருமையாக பயன்படுத்த முடியும். பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை

கொண்டு இந்த சாதனம் வெளிவந்தது, தற்போது ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ரியல்மி நார்சோ 30 ப்ரோ சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

Related Post

ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் க்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளன, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சிஇணைப்பு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில்

வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

source: gizbot.com

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago