Mi Independence Sale: சியோமி சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

சியோமி நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சியோமி நிறுவனத்தின் சாதனங்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சியோமி நிறுவனம் Independence Saleஎனும் தலைப்பில் அதன் சாதனங்களுக்கு அசத்தலான தள்ளுபடியை வழங்கியுள்ளது.

தற்போது Live-இல் இருக்கும் Mi Independence Sale ஆனது வரும் ஆகஸ்ட் 9 வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனை Mi.com வழியாக மட்டுமின்றி பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வழியாகவும் அணுக கிடைக்கும் என்று தகவல்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் கொண்ட சியோமி மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.27,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பின்பு 8ஜிபி ரேம் கொண்ட சியோமி மி 11 எக்ஸ் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.29,999-விலையில் வாங்க கிடைக்கிறது.

இந்த சிறப்பு விற்பனையில் சியோமி நிறுவனத்தின் மி 11எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளிலும் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனம் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் ரெட்மி டிவிகளுக்கு ரூ.2000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது, அதன்படி ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 50 இன்ச் இப்போது ரூ.36,999-க்கு கிடைக்கிறது. பின்பு இதன் 55-இன்ச் மாடல் ரூ.43,999-விலையிலும், 65-இன்ச்

மாடல் ரூ.60,999-விலையிலும் கிடைக்கிறது.

Related Post

மேலும் இந்த சிறப்பு விற்பனையில் TV 4X 50-inch மாடல் ஆனது இப்போது ரூ.36,999 க்கு கிடைக்கிறது. பின்பு இதன் 55-இன்ச் மாடல் ரூ.42,999-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சியோமி நிறுவனத்தின் முதல் க்யூஎல்இடி டிவி சாதனத்திற்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனம் ரூ.1000 தள்ளுபடியை பெற்று, இப்போது ரூ.58,999-க்கு வாங்க கிடைக்கிறது.

Mi Independence Sale விற்பனையில் சியோமி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு மி வாட்ச் ரிவால்வ் மாடலுக்கு ரூ.2000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் எஸ்பிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தி சாதனங்களை வாங்கும் பயனர்களுக்கு கூடுதல் கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த சிறப்பு சலுகைகளை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சியோமி நிறுவனம் அண்மையில் மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4சி 32-இன்ச்( Mi LED Smart TV 4C 32-inch)மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4சி 32-இன்ச் மாடல் ஆனது 10W x 2 பவர்ஃபுல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இது அற்புதமான ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட பேட்ச்வால் யுசர் இன்டர்ஃபேஸ்-ல் இயங்குகிறது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4சி மாடலில் Chromecast ஆதரவும் உள்ளது. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. இதுதவிர 64-பிட் குவாட்-கோர் பிராஸசர் வசதியுடன் இந்த மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4சி 32-இன்ச் மாடல் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அமேசான் பிரைம் , நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜீ 5, ஆல்ட் பாலாஜி, சோனிலைவ், ஜியோசினிமா, சன்என்எக்ஸ்டி, எபிகான், ஹோய்சாய் உள்ளிட்ட அணுகலை வழங்குகிறது இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்.

source: gizbot.com

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago