Micromax In 2b நாளை இந்தியாவில் அறிமுகம்.. விலை கம்மியாக இருக்கும் எனத் தகவல்.!

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அதன் அடுத்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யத் தயாராகிவிட்டது. மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிதாக மைக்ரோமேக்ஸ் in 2b என்ற நோ-ஹேங் ஸ்மார்ட்போன் மாடலை நாளை அறிமுகம் செய்யவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலுடன் நிறுவனம் கூடுதலாக சில ஆடியோ சாதனங்களையும் அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்து, ஒரு புதிய டீசர் வையும் வெளியிட்டுள்ளது.

இந்த தகவலை மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராகுல் ஷர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த தகவலைப் பதிவிட்டுள்ளார்.
ராகுல் ஷர்மாவின் ட்வீட்டில் குறிப்பிடப்பட்டிருப்பது, ”மைக்ரோமேக்ஸ் நிறுவனம் நாளை மதியம் 12 மணி அளவில் புதிய #MicromaxIN2b என்ற #NoHangPhone ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. இத்துடன் ட்ரெண்டியான புதிய ஆடியோ சாதனங்களையும் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

மைக்ரோமேக்ஸ் இன் 2 பி போனில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள்

வரவிருக்கும் புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2 பி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு தளத்தில் இயக்கும் ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல், இந்த புதிய சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களைப் பொருத்தவரை, மைக்ரோமேக்ஸ் இன் 2 பி இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம் போல் செல்பி அனுபவத்திற்கு இது ஒற்றை கேமரா அமைப்பை கொண்டிருக்கும்.

விலை இவ்வளவு கம்மியா இருக்குமா?

மைக்ரோமேக்ஸ் இன் 2 பி ஸ்மார்ட்போன் சாதனம் கருப்பு, நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் நாளை அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மைக்ரோமேக்ஸ் இன் 2 பி இல் கிடைக்கும் இணைப்பு விருப்பங்களைப் பொறுத்தவரையில் இது வைஃபை, ப்ளூடூத், கைரேகை சென்சார் உடன் கூடிய பல முக்கிய அம்சங்களை ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சாதனம் ரூ.8,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

var embedId = {jw: [],yt: [],dm: [],fb: []};function pauseVideos(vid) {var players = Object.keys(embedId);players.forEach(function(key) {var ids = embedId[key];switch (key) {case “jw”:ids.forEach(function(id) {if (id != vid) {var player = jwplayer(id);if (player.getState() === “playing”) {player.pause();}}});break;case “yt”:ids.forEach(function(id) {if (id != vid) {id.pauseVideo();}});break;case “dm”:ids.forEach(function(id) {if (id != vid && !id.paused) {id.pause();}});break;case “fb”:ids.forEach(function(id) {if (id != vid) {id.pause();}});break;}});}function pause(){pauseVideos()}
Doston, kal hum leke aa rahey hain #MicromaxIN2b, the #NoHangPhone. Aur uske saath, we are also launching two funky new products in the audio category. Here’s the first look. Join us tomorrow at 12 PM to know more.#AbIndiaChaleNonStop
#ShorNoMore
#voiceultagamepalta
pic.twitter.com/SMaD1c3wnt
Rahul Sharma (@rahulsharma) July 29, 2021
புதிதாக இரண்டு ஆடியோ சாதனங்கள் அறிமுகம்

இத்துடன் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, புதிதாக இரண்டு ஆடியோ சாதனங்களை Micromax நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த இரண்டு புதிய ஆடியோ சாதனங்களும் ஏர் ஃபங்கி என்ற பெயரில் ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனங்களாக அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த சாதனங்கள் பிளாக், ப்ளூ, ரெட், எல்லோவ் மற்றும் வைட் நிறங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மிகவும் கண்கவர் வண்ணங்களில் இவை வருவதனால் நிச்சயம் இதற்கு இந்தியச் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் வலைத்தளத்தில் பிரத்தியேக விற்பனை

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 30 ஆம் தேதி ஆனா நாளை, இந்த புதிய மைக்ரோமேக்ஸ் in 2b ஸ்மார்ட்போன் உடன் அதன் இரண்டு புதிய ஏர் ஃபங்கி TWS சாதனத்தையும் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அறிமுக நிகழ்விற்கு பின்னர், மைக்ரோமேக்ஸ் in 2b ஸ்மார்ட்போன் மாற்றம் மைக்ரோமேக்ஸ் ஏர் ஃபங்கி TWS சாதனங்கள் பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளங்கள் வழியாக விற்பனைக்கு கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

source: gizbot.com

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago