டெஸ்லா செல்ப் டிரைவிங் காரை நிலவு மெதுவாக்கியதா? வைரல் வீடியோவுடன் காரணம்.. எலான் மஸ்குக்கே இது தெரியல..

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் செல்ப் டிரைவிங் கார்களை அறிமுகம் செய்தது. இந்த கார்கள் தற்பொழுது அமெரிக்கா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செல்ப் டிரைவிங் கார்களை சந்திரன் மெதுவாகச் செல்ல வைக்கிறது என்ற புதிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆதார தற்பொழுது டிவிட்டரில் வைரல் ஆகிவருகிறது.

டெஸ்லா செல்ப் டிரைவிங் வாகனம் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது, தூரத்து வானில் தெரியும் சந்திரனை ​​மஞ்சள் போக்குவரத்து விளக்குக்கென்று ஆட்டோ பைலட் ப்ரோக்ராம் தவறாக நினைத்ததால் தனது கார் மெதுவாகச் செல்வதை காரின் உரிமையாளர் கவனித்துள்ளார். டெஸ்லா வாகனத்தின் இந்த தடுமாற்றம் கேமராவில் பிடிக்கப்பட்டு டிவிட்டரில் நெல்சன் என்பவர் பகிர்ந்து கொண்டனர்.
அவர் டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க்கை தனது இடுகை உடன் டேக் செய்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, “எலோன் மஸ்க், உங்கள் குழு ஆட்டோமேட்டிக் செல்ப் டிரைவிங் பைலட் ப்ரோக்ராம் அமைப்பை நிலவு ஏமாற்றம் செய்கிறது என்பதை நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும். டெஸ்லா கார் வனத்தில் இருக்கும் முழு சந்திரனை ஒரு மஞ்சள் போக்குவரத்து விளக்கு என்று கருதுகிறது, மேலும் நெடுஞ்சாலையில் முன்னாள் வாகனங்கள் இல்லாத போது கூட மெதுவாகச் செல்கிறது” என்று அவர் டிவிட்டரில் எழுதியுள்ளார்.

அதேபோல், நெல்சன் தனது டெஸ்லா காருக்கான முழு செல்ப் டிரைவிங்குக்கான சந்தாவை வாங்கியதாகவும், அந்த அம்சத்தைச் சோதிக்க விரும்பியதாகவும் அவர் கூறினார். டெஸ்லா உரிமையாளர்கள் நிறுவனத்தின் முழு சுய-ஓட்டுநர் அம்சத்திற்கு சுமார் $ 99 டாலர் என்ற விலையிலும். மாதத்திற்கு $ 199 டாலருக்கும் பயனர்கள் சந்தா செலுத்தலாம் என்று டெஸ்லா சமீபத்தில் அறிவித்தது, வாகனம் வாங்கும் போது $ 10,000 கூடுதலாகச் செலுத்துவதற்குப் பதிலாக இந்த சந்தா திட்டம் வழங்கப்படுகிறது.

Related Post

பௌர்ணமி என்பதனால் சந்திரன் முழு வடிவத்தில் இருந்தது என்றும், இதனால் டெஸ்லா வாகனத்தின் தன்னியக்க பைலட் அமைப்பு நிலவை ஒரு மஞ்சள் ஒளிரும் போக்குவரத்து விளக்கு என்று நினைத்து ஏமாற்றிவிட்டது என்று கூறுகிறது. மேலும், அந்த பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீ காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தால் சந்திரன் வழக்கத்தை விட மஞ்சள் நிறமாகத் தோன்றியுள்ளது. டிராஃபிக் லைட்டுக்காக ஐகானை காட்டிய பின்னர், கார் மெதுவாகச் செல்லும் காட்சிகள் ட்விட்டரில் வைரலாகியுள்ளது.

var embedId = {jw: [],yt: [],dm: [],fb: []};function pauseVideos(vid) {var players = Object.keys(embedId);players.forEach(function(key) {var ids = embedId[key];switch (key) {case “jw”:ids.forEach(function(id) {if (id != vid) {var player = jwplayer(id);if (player.getState() === “playing”) {player.pause();}}});break;case “yt”:ids.forEach(function(id) {if (id != vid) {id.pauseVideo();}});break;case “dm”:ids.forEach(function(id) {if (id != vid && !id.paused) {id.pause();}});break;case “fb”:ids.forEach(function(id) {if (id != vid) {id.pause();}});break;}});}function pause(){pauseVideos()}
Hey @elonmusk you might want to have your team look into the moon tricking the autopilot system. The car thinks the moon is a yellow traffic light and wanted to keep slowing down. 臘 @Teslarati
@teslaownersSV
@TeslaJoy
pic.twitter.com/6iPEsLAudD
Jordan Nelson (@JordanTeslaTech) July 23, 2021

source: gizbot.com

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago